மதிப்பை இழந்த டெக்ஸ்மாக்கோ ரயில்.. அதிகரித்து வரும் கடன் தான் காரணமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா : கொல்கத்தாவில் 170 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள டெக்ஸ்மாக்கோ ரயில் அன்ட் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் தர மதிப்பீட்டை குறைத்துள்ளது மதிப்பீட்டு நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ்.

 

இதற்கு முக்கியக் காரணம் இந்த நிறுவனத்தின் அதிகரித்து வரும் கடன் அளவு தான் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1939ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், புகழ்பெற்ற தொழிலதிபர் மறைந்த கே கே பிர்லா அவர்களால் நிறுவப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

பல நிறுவனங்கள் உண்டு

பல நிறுவனங்கள் உண்டு

இது ஒரு ரயில்வே மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனமாகும். இது அட்வென்ஸ் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகவும் கருதப்படுகிறது. இதன் தலைவர் சரோஜ் குமார் பொட்டார் ஆகும். இந்த நிறுவனம் ஐஎஸ்ஓ 9001 - 2008 தர சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனம். இதன் குழுமத்தில் ஜூவாரி அக்ரோ கெமிக்கல்ஸ், ஜூவாரி இன்ஃப்ராவோர்ல்டு இந்தியா லிமிடெட், ஹெட்டிச் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் அடங்கும்.

கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது

கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது

இந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்த இந்த நிறுவனத்தின் நிகர கடன் மற்றும் பலவீனமான கடன் அளவீடுகளை அடுத்து, இந்த நிறுவனத்தின் நீண்ட கால கடன் மதிப்பீட்டை குறைத்துள்ளது. இதன் நீண்ட கால மதிப்பீடான IND AA என்ற குறியீட்டிலிருந்து, IND A என்றும் குறைத்துள்ளது இந்தியா ரேட்டிங்ஸ். இந்த நிலையில் இதன் மதிப்பீடானது தற்போது எதிர்மறையாக உள்ளது.

காரணம் என்ன
 

காரணம் என்ன

இந்த மதிப்பீடு குறைப்பானது டெக்ஸ்மாக்கோவின் தொடர்ச்சியான எதிர்மறை பணப்புழக்கம், அதிகரித்து வரும் நிகர கடன், முன்பு எதிர்பார்த்ததை விட பலவீனமான கடன் அளவீடுகளை பிரதிபலிக்கிறது என்று இந்தியா மதிப்பீடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்மறையான இந்த தரக்குறைப்பு மதிப்பீட்டால் முதலீடுகள் மற்றும் கடன் பெறுவது சற்று கடினமான விஷயமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

வெளி நிதியை நம்பியுள்ளது

வெளி நிதியை நம்பியுள்ளது

மேலும் இது தவிர இந்த நிறுவனம் வெளி நிதியுதவியை நம்பியிருப்பது மிக முக்கியமானதாகவே கருதப்படுகிறது. மேலும் அதிகரிக்கும் வங்கி நிதியுதவியை கட்டுப்படுத்த முடிந்தாலும், அதன் சொந்த இருப்பு நிலையில் குறிப்பில் போதுமான பணப்புழக்கத்தை நீடித்த அடிப்படையில் பெறுவது மதிப்பீடு கண்காணிப்பை தீர்ப்பதற்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ratings
English summary

India ratings downgrade Texmaco Rail and engineering ltd's ratings

India ratings downgrade Texmaco Rail and engineering ltd's ratings. Issuer rating to 'IND A' from 'IND AA'.
Story first published: Tuesday, November 26, 2019, 13:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X