Q1ல் 18 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை 285% அதிகரிப்பு.. நிதி பற்றாக்குறை 40.7%.. Ind-Ra கணிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவலால், இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்த குறியீடுகள் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் 18 மாநிலங்களின் வருவாய் பற்றாக் குறையானது 285 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த விகிதமானது கடந்த ஆண்டு பட்ஜெட்டில், வருவாய் பற்றாகுறையானது ஜூன் காலாண்டில் 12.9 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததை இந்தியா ரேட்டிங்ஸ் நினைவு கூர்ந்துள்ளது.

நிதி பற்றாக்குறை அதிகரிப்பு

நிதி பற்றாக்குறை அதிகரிப்பு

அதே போல இந்தியாவின் 18 பெரிய மாநிலங்களில் நிதி பற்றாக்குறையானது 40.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்த விகிதமானது 13.4 சதவீதமாக இருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இந்த நேரத்தில் அரசின் வருவாய் குறைந்து செலவினங்கள் அதிகரித்தது. இதனால் அரசி நிதி அழுத்தமானது மிக அதிகமாக அதிகரித்துள்ளது.

 

வருவாய் குறைவு & செலவினங்கள் அதிகரிப்பு

வருவாய் குறைவு & செலவினங்கள் அதிகரிப்பு

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 18 மாநிலங்களின் செலவினங்கள் குறித்த தரவுகள் மட்டுமே கிடைத்துள்ளதாக பிசினஸ் டுடே தெரிவித்துள்ளது. மேலும் இதில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது வருவாய் 18.41 சதவீதம் குறைந்துள்ளது. இதே செலவினங்கள் கடந்த ஆண்டை விட 11.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இரு இலக்க வருவாய் இழப்பு

இரு இலக்க வருவாய் இழப்பு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஹிமாச்சல பிரதேசம், சண்டிகர், நாகலாந்து மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்கள் இரு இலக்க வருவாய் வருவாய் இழப்பினை சந்தித்துள்ளனர். இதே ஆந்திரபிரதேசம், மேகாலயா, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் முதல் காலாண்டில் வருவாயை அதிகரித்துள்ளன.

வருவாய் பற்றாக்குறை

வருவாய் பற்றாக்குறை

முந்தைய ஆண்டை விட பெரும்பாலான மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையையே சந்தித்துள்ளன. எனினும் ஒடிசா, ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள், கொரோனா வைரஸ் அழுத்ததினையும் மீறி வருவாய் உபரியை கொண்டுள்ளன.

சம்பள செலவினங்கள் & பென்ஷன் குறைவு

சம்பள செலவினங்கள் & பென்ஷன் குறைவு

அதேபோல மேற்கூறிய இந்த 18 மாநிலங்களில் சம்பள செலவினங்கள் மற்றும் பென்ஷன் 10.5 சதவீதமும், இதே மானியங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 39.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரம் பொதுமக்களுக்காக சுகாதாரம் சம்பந்தமான செலவினம் 40.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனாவினால் நிதி அழுத்தம்

கொரோனாவினால் நிதி அழுத்தம்

இதில் தமிழ்நாடு, கேரளா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவினங்கள் அதிகமாக குறைந்துள்ளது. அதே நேரம் சட்டீஸ்கர், ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் இந்த அறிக்கையானது, முதல் காலாண்டில் இந்திய மாநிலங்கள் மிகுந்த நிதி அழுத்தத்தில் உள்ளதையே சுட்டிக் காட்டுகிறது. குறிப்பாக வருவாய் குறைந்த அதே நேரத்தில் செலவினங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India ratings report said revenue deficit jump to 258% in 18 states

India ratings report said revenue deficit of 18 states jump to 258% in june quarter, and fiscal deficit at 40.7% at this same time.
Story first published: Friday, October 2, 2020, 10:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X