45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஆட்டோமொபைல் சந்தை ஏற்கனவே மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் தவித்து வந்த நிலையில் தான் கொரோனா இந்திய மக்களையும், இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தைப் பாதித்தது. இதன் எதிரொலியாக 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சுமார் 45 சதவீத விற்பனை பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

கொரோனா பாதிப்பிற்கு முன்பே இந்திய ஆட்டோமொபைல் சந்தை பல்வேறு வர்த்தகப் பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. இதனால் இந்தியாவில் வாகன விற்பனை குறைவாக இருந்தது. இதில் முக்கியமான BS6 ரக வாகன தயாரிப்பும், பழைய வாகனங்களை விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை தான் பிரதானம்.

இந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் துறை ஒரு முக்கியமான ஆய்வுகளை மத்திய அரசின் முன் வைத்துள்ளது.

ஆஹா... 52 வார உச்ச விலையைத் தொட்ட 30 பங்குகள் பட்டியல் இதோ!ஆஹா... 52 வார உச்ச விலையைத் தொட்ட 30 பங்குகள் பட்டியல் இதோ!

வர்த்தகப் பாதிப்பு

வர்த்தகப் பாதிப்பு

இந்திய ஆட்டோமொபைல் துறையின் அமைப்பான சியாம் (SIAM) மத்திய அரசின் முன் ஒரு முக்கியமான ஆய்வை முன் வைத்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 2 சதவீதம் வரையில் சரிந்தால், இந்தியாவில் கார், பைக், கனரக வாகனங்களின் விற்பனை சுமார் 45 சதவீதம் வரையில் சரியும் எனத் தெரிவித்துள்ளது.

இதேபோல், கொரோனா பாதிப்புகளையும் தாண்டி இந்தியப் பொருளாதாரம் 2 முதல் 3 சதவீதம் வரையில் உயர்ந்தால் வாகன விற்பனை 20 சதவீதம் சரியும் என்றும், பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் இதே நிலையில் இருந்தால் வாகன விற்பனை 35 சதவீதம் வரையில் சரியும் எனத் தெரிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை


SIAM அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தாலும் இத்துறையின் வர்த்தகம் குறைவாகத் தான் இருக்கும் எனத் தெளிவாக ஆய்வு செய்து கூறியுள்ளது.

இந்நிலையில் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் சலுகைகளை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பொருளாதாரம்
 

இந்திய பொருளாதாரம்

உலகளாவிய கன்சல்டன்சி நிறுவனமான மெக்கனிச் & கோ இந்திய பொருளாதாரத்தைப் பற்றிக் கூறுகையில், இந்தியாவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால், இந்தியா பொருளாதாரம் 2020-21 நிதியாண்டில் 2 முதல் 3 சதவீதம் வரையில் இருக்கும் சரியும் எனத் தெரிவித்துள்ளது.

இதுவே மூடிஸ் நிறுவனம் இந்த வருடம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 0% ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

18 சதவீத சரிவு

18 சதவீத சரிவு

கடந்த நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சந்தித்த பல்வேறு பிரச்சனைகளில் கார், பைக், கனரக வாகனங்களின் விற்பனை சுமார் 18 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதுவே கடந்த 2 வருடத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 40 முதல் 45 சதவீதம் விற்பனை சரிவை இந்திய ஆட்டோமொபைல் சந்தை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's automakers warn of up to 45% sales drop as economy slumps amid pandemic

India's automakers have warned that total automobile sales could fall as much as 45% in the current fiscal year in a worst-case scenario as economic growth slumps due to the COVID-19 pandemic, and they are seeking government help through the crisis.
Story first published: Tuesday, May 12, 2020, 23:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X