2021ஆம் நிதியாண்டில் இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் 5 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 8 சதவீதமும் சரிந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கிறது.
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 32.17 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், மார்ச் 31, 2021 உடன் முடிந்த நிதியாண்டில் 30.5 மில்லிடன் டன் கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது எனப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாட்டின் உற்பத்தி அதிகளவிலான பாதிப்பு எதிர்கொண்டது. இதில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் தப்பிக்கவில்லை.
2021ஆம் நிதியாண்டில் ONGC நிறுவனம் 20.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து 2 சதவீத சரிவையும், ஆயில் இந்தியா லிமிடெட் 5.4 சதவீத சரிவையும், வேதாந்தா க்ரைன் 12.6 சதவீத சரிவையும் சந்தித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கோவிட் வேக்சின்-க்கு 10% சுங்க வரி தள்ளுபடி.. உண்மை என்ன..?!
இதேபோல் இயற்கை எரிவாயு உற்பத்தி 2020ஆம் நிதியாண்டில் 31.18 BCM அளவில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு நிறைந்த 2021ஆம் நிதியாண்டில் 28.67 பில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் வாயு மட்டுமே உற்பத்தி செய்து 8 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.