இங்கேயும் அம்பானி, அதானியா.. மருத்துவ நிறுவனங்கள் புலம்பல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களாக விளங்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மற்றும் கௌதம் அதானியின் அதானி குரூப் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

 

குறிப்பாகத் தனது தொடர்பு இல்லாத, முன் அனுபவம் இல்லாத பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் தற்போது பல துறையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இதைக் கைப்பற்றி அனைத்து துறையிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி தற்போது மருத்துவத் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.

முகேஷ் அம்பானி திடீர் முடிவு.. ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய மாற்றம்..! முகேஷ் அம்பானி திடீர் முடிவு.. ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய மாற்றம்..!

மருத்துவப் பரிசோதனை துறை

மருத்துவப் பரிசோதனை துறை

இந்தியாவில் தற்போது மருத்துவப் பரிசோதனை மையங்களின் வர்த்தகம் மற்றும் டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இத்துறையில் அதிகப்படியான பணப் புழக்கம், டிமாண்ட், அதிகப்படியான லாபம், எளிதாக வர்த்தக விரிவாக்கம் செய்ய முடியும் வாய்ப்பு ஆகியவை முதலீட்டாளர்களையும், பணக்காரர்களையும் இத்துறைக்குள் ஈர்க்கும் சக்தியாக மாறியுள்ளது.

முதலீடுகள்

முதலீடுகள்

இந்தியாவில் தற்போது மருத்துவப் பரிசோதனை துறையில் பார்மா நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஸ்டார்ட்அப், பெரிய தொழிற்துறை நிறுவனங்களும் களமிறங்கியுள்ளது. இத்துறையில் கடந்த 3 வருடத்தில் பெரிய அளவிலான முதலீடுகள் வெளிநாட்டில் இருந்தும் குவிந்துள்ளது.

அதானி குரூப்
 

அதானி குரூப்

இந்த நிலையில் அதானி குரூப் மே மாதம் Adani Health Ventures என்னும் நிறுவனத்தை உருவாக்கி மருத்துவ மற்றும் நோய் கண்டறியும் வசதிகள், சுகாதார உதவிகள், சுகாதாரத் தொழில்நுட்ப அடிப்படையிலான வசதிகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளில் இறங்க முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா

இதேபோல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகஸ்ட் 2020 மருந்து விற்பனை செய்யும் Netmeds நிறுவனத்தை 620 கோடி ரூபாய்க்க வாங்கியது, டாடா ஜூன் 2021ல் 1MG நிறுவனத்தை 720 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

லூபின், டோரண்ட் பார்மா

லூபின், டோரண்ட் பார்மா

ஜூலை 2022, மருந்து நிறுவனமான லூபின் சொந்தமாக லூபின் டயக்னாஸ்டிக்ஸ் என்னும் மருத்துவப் பரிசோதனை நிறுவனத்தைத் துவங்கியது. மேலும் அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட டோரண்ட் பார்மா டோரண்ட் டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்டை பிப்ரவரி 2022 இல் துவங்கியது.

Thyrocare கைப்பற்றல்

Thyrocare கைப்பற்றல்

ஜூன் 2021 இல், இ-ஃபார்மசி நிறுவனமான PharmEasy, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட மருத்துவப் பரிசோதனை நிறுவனமான Thyrocare-ஐ சுமார் 4,546 கோடி ரூபாய்க்கு வாங்கியது யாராலும் மறக்க முடியாது. மருந்தகச் சில்லறை விற்பனையாளரான மெட்பிளஸ் மார்ச் 2022 இல் ஹைதராபாத்தில் மருத்துவப் பரிசோதனை மையத்தைத் துவங்கியது.

மருத்துவமனை நிறுவனங்கள்

மருத்துவமனை நிறுவனங்கள்

இதைத் தொடர்ந்து குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட மேக்ஸ் மருத்துவமனைகள், ஹெல்த்கேர் நிறுவனமான Aster DM ஆகியவையும் இத்துறைக்குள் நுழைந்துள்ளது. இதனால் மருத்துவப் பரிசோதனை துறை அடுத்த 10 வருடத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's diagnostics sector getting bigger and bigger after Ambani and Adani entered

India's diagnostics sector getting bigger and bigger after Ambani and Adani entered
Story first published: Sunday, October 23, 2022, 21:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X