11 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவில் தொழிற்துறை.. என்ன காரணம்.. ஏன் இந்த சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் உற்பத்தி துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு (Purchasing Managers Index) கடந்த ஜூன் மாதத்தில், 11 மாதத்தில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

கொரோனாவின் கொடிய இரண்டாம் அலைக்கு மத்தியில், கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்தது.

பல மாநிலங்களில் முழு லாக்டவனும் அமல்படுத்தப்பட்டது. இன்றளவிலும் கூட தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கவில்லை. இதன் காரணமாக தொழிற்துறை நடவடிக்கையானது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் மோசமான சரிவு

ஜூன் மாதத்தில் மோசமான சரிவு


லாக்டவுனினால் தொழிற்துறையில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. மக்கள் பல லட்சம் பேர் வேலையினையும் இழந்துள்ளனர். இதனால் தேவையும் சரிவினையும் கண்டுள்ளது. இந்த நிலையில் தான் தொழிற்துறை குறித்தான குறியீடும் சரிவில் உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்த PMI விகிதம் 11 மாதத்தில் இல்லாத அளவு 48.1 ஆக குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதமானது கடந்த மே மாதத்தில் 50.8% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி அதிகரிக்கலாம்

இனி அதிகரிக்கலாம்


எனினும் தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தாலும், குறையத் தொடங்கியுள்ளது. பல நகரங்களிலும் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தொழில் துறையின் தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இனி உற்பத்தியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.

 மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு

மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு

நிக்கி மார்கிட் இந்தியா அமைப்பு வெளியிட்ட உற்பத்தி குறித்தான பிஎம்ஐ குறியீட்டில், கடந்த ஜூன் மாதத்தில் மூலதன பொருட்களின் விலை ஏற்றத்தின் மத்தியில், உற்பத்தி ஒரு கூர்மையான சரிவினைக் கண்டது. தேவையும் ஜூன் மாதத்தில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது.

வளர்ச்சி கணிப்பு

வளர்ச்சி கணிப்பு

எனினும் இனி வரும் மாதங்களில் கணிசமான வளர்ச்சி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் முன்னதாக 10.5% வளர்ச்சி காணலாம் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது அதனை 9.5% ஆக குறைத்துள்ளது.
இதற்கிடையில் தற்போதைக்கு வட்டி அதிகரிப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது வளர்ச்சி உந்துதலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெதுவான வேகத்தில் வளர்ச்சி

மெதுவான வேகத்தில் வளர்ச்சி

இந்தியா உற்பத்தியாளர்கள் தற்போது லாக்டவுனுக்கு முன்பு இருந்ததை விட, கணிசமான அளவில், மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றனர். குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர்கள், மற்ற தொழில்துறை குறித்தான குறியீடுகள் என அனைத்தும் மெதுவான வேகத்தில் வளர்ச்சி பாதையில் காணப்படுகின்றன. இது உலகளவில் குறைவான தேவை உள்ளதையே காட்டுகிறது. எனினும் தேவை மெதுவான வேகத்தில் அதிகரித்து வருகின்றது. ஆக இனி வரும் மாதங்களில் இந்த குறியீடு இன்னும் வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s factory activity contracts for 1st time since 11 month in June; check details

PMI updates.. India’s factory activity contracts for 1st time since 11 month in June; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X