இந்தியாவின் முதல் யூனிகார்ன்.. அதிரடி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் இருக்கும் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் இந்த ரெசிஷன் பாதிப்பில் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்பதற்காகச் செலவுகளைக் குறைத்து வர்த்தகத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

 

இந்த நிலையில் வர்த்தகத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்த மார்கெட்டிங் போன்ற முக்கியமான விஷயங்களுக்கான பணத்தைக் குறைக்க முடியாத காரணத்தால் ஊழியர்கள் பணிநீக்கம் மிகவும் முக்கியமான கருவியாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதல் யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனமாக உயர்ந்த இன்மொபி சுமார் 70 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது, எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் விஷயம் பெருசு. ஏன் தெரியுமா..?

452 பேர் பணிநீக்கம்.. விப்ரோ கொடுத்த விளக்கம்..! 452 பேர் பணிநீக்கம்.. விப்ரோ கொடுத்த விளக்கம்..!

இந்திய ஸ்டார்ட்அப் துறை

இந்திய ஸ்டார்ட்அப் துறை

இந்தியாவில் சீட் ஃபண்டிங் (Seed Funding) அதாவது ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் துவங்குவதற்கான முதலீட்டை பெற்ற நிறுவனங்கள் சீரியஸ் ஏ முதலீட்டை பெற திணறி வருகிறது. இதேபோல் நிதி நெருக்கடியில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய முதலீடுகளைப் பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கும் இதேவேளையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் கன்ஸ்யூமர் வர்த்தகத்தை மேம்படுத்தும் நிறுவனங்கள் முதலீட்டை பெற்று வருகிறது.

Decacorn நிலை

Decacorn நிலை

ஆனால் பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறிப்பாக Decacorn பிரிவில் நிறுவனங்களும், Decacorn நிலையை அடைய நெருங்கிய நிறுவனமும் போதுமான நிதி ஆதாரங்கள் உடன் இருக்கும் போது பணிநீக்கம் செய்துள்ளது தான் தற்போதைய பிரச்சனை.

இன்மொபி நிறுவனம்
 

இன்மொபி நிறுவனம்

இந்த இடத்தில் தான் இன்மொபி நிறுவனத்தின் பணிநீக்கம் பெரு அதிர்ச்சியை அளிக்கிறது. சாப்ட்பேங்க் நிறுவனத்தின் அதிகப்படியான முதலீட்டில் இயங்கும் இன்மொபி 50 - 70 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் 2023 ஆம் ஆண்டில் சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இன்மொபி முடிவு

இன்மொபி முடிவு

இன்மொபி நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2600 பேர். மேலும் புதிய ஊழியர்கள் சேர்ப்பில் தேவை இருந்தால் மட்டுமே சேர்க்க முடிவு செய்துள்ளோம், கூடுதல் தேவைக்கோ அல்லது உபரியாகவோ அல்லது எதிர்காலத் தேவைக்காக ஊழியர்களைச் சேர்க்கச் சற்றும் விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இன்மொபி - Glance

இன்மொபி - Glance

இன்மொபி இந்த 70 ஊழியர்கள் பணிநீக்கம் தனது கிளை நிறுவனமான Glance நிறுவனத்தையும் சேர்த்த பணிநீக்கம். இன்மொபி 2011 ஆம் ஆண்டில் யூனிகார்ன் நிறுவனமான தகுதி பெற்றது, Glance 2020 ஆம் ஆண்டில் கூகுள் மற்றும் Mithril Capital ஆகிய இரு நிறுவனத்திடம் இருந்து 145 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டிய போது யூனிகார்ன் நிலையை அடைந்தது.

இன்மொபி முதல் ஓலா

இன்மொபி முதல் ஓலா

2022 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 20000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டிலும் இன்மொபி முதல் ஓலா, ஸ்விக்கி வரையில் பல நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. 2023 ஆம் ஆண்டில் டெக் ஊழியர்கள் பணிநீக்கம் மிகவும் அதிகம்.

உலகின் டாப் 4 டெக் நிறுவனங்கள்

உலகின் டாப் 4 டெக் நிறுவனங்கள்

இதற்கிடையில் உலகின் டாப் 4 பெரிய டெக் நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவங்கி 20 நாள் மட்டுமே ஆன நிலையில் அமேசான் 18000 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் 10000 ஊழியர்கள், கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துப் பெரும் அதிர்ச்சி கொடுத்தது. 2022ல் மெட்டா 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Microsoft செய்வது அநியாயம்.. 40000 பேரை சேர்த்து விட்டு 10000 பேரை பணிநீக்கம் செய்வது ஏன்..! Microsoft செய்வது அநியாயம்.. 40000 பேரை சேர்த்து விட்டு 10000 பேரை பணிநீக்கம் செய்வது ஏன்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's first unicorn company Inmobi layoff 50-70 employees including Glance Employees

India's first unicorn company Inmobi layoff 50-70 employees including Glance Employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X