எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, இந்தியாவின் ஏரல் மாதம் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயரும் என ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
ஐந்து மாநில தேர்தல் சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் இருந்து எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து விலையை உயர்த்தின. மறுபக்கம் பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் அளவில் உயர்ந்தது. எனவே எதிர்பார்த்ததை போன்று இந்தியாவின் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு
உணவுப் பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீட்டில் கிட்டத்தட்டப் பாதியாக அதிகரித்துள்ளது. காய்கறி மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வால் மார்ச் மாதம் உச்சத்தை எட்டிய பணவீக்கம் அப்படியே தொடருகிறது.
சில்லறை பணவீக்கம் கருத்துக்கணிப்பு
இவை காரணமாக ஆசியாவின் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவில் மார்ச் மாதம் 6.95 சதவீதமாக இருந்த பணவீக்கம், 7.5 சதவீதமாக அதிகரித்திருக்கும் என மே 5 முதல் 9-ம் தேதி வரையில் ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
எதிர்பார்ப்பு
இந்திய புள்ளியியல் துறை மே 12-ம் தேதி பணவீக்கம் குறித்த தரவை வெளியிடும் போது 7 முதல் 7.85 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம்
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்துவதற்கு ஒரு நாள் முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் உயத்தி 4.4 சதவீதமாக அறிவித்தது. தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. எனவே எண்ணெய் விலை கூடுதலாக அதிகரித்து மேலும் பணவீக்கம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்த விலை பணவீக்கம்
மொத்த விலை பணவீக்கம் 14.48 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே இது இரட்டை இலக்கில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications