டெல்லி : இந்தியாவில் உற்பத்தி துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு ((Purchasing Managers' Index) கடந்த நவம்பர் மாதத்தில், மூன்று மாதத்தில் இல்லாத அளவுக்கு 56.3 ஆக குறைந்துள்ளது.
இது கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த PMI விகிதம் 58.9 ஆக இருந்தது. எனினும் இந்த வளர்ச்சி விகிதமானது தொடர்ச்சியாக 50-க்கும் மேல் இருந்து வருவது சற்று ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தாலும், லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தொழில் துறையின் தேவையும் அதிகரித்து வருகின்றது. உற்பத்தியும் அதிகரித்து வருகின்றது. எனினும் வளர்ச்சி மூன்று மாதங்களில் இல்லாத அளவு சற்று குறைந்துள்ளது.
நிக்கி மார்கிட் இந்தியா அமைப்பு வெளியிட்ட உற்பத்தி குறித்தான பிஎம்ஐ குறியீடு, கடந்த நவம்பர் மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது மெதுவான வேகத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் இது விரைவில் மீட்கப்படலாம். சமீபத்திய மாதங்களில் காணப்பட்ட வளர்ச்சியில் இருந்து சற்று பின்னடைவை கண்டிருந்தாலும், இது ஒரு பெரிய பின்னடைவு இல்லை.
ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்.. விவரம் இதோ..! #PNB
அதே நேரம் புதிய ஆர்டர்கள் மெதுவான வேகத்தில் உயர்ந்துள்ளன. எனினும் கடந்த செப்டம்பர் மாதத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டதை விட கூர்மையான வளர்ச்சி, தேவை அதிகரிப்பு, உற்பத்தி வளர்ச்சி சற்று குறைந்துள்ளது.
தற்போது கொரோனா தொடர்பான செய்திகள் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. இது வணிக நம்பிக்கையையும் கட்டுப்படுத்துகிறது. இந்தியா உற்பத்தியாளர்கள் தற்போது லாக்டவுனுக்கு முன்பு இருந்ததை விட, கணிசமான அளவில், மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றனர். குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர்கள், மற்ற தொழில்துறை குறித்தான குறியீடுகள் என அனைத்தும் மெதுவான வேகத்தில் வளர்ச்சி பாதையில் காணப்படுகின்றன. இது உலகளவில் குறைவான தேவை உள்ளதையே காட்டுகிறது. எனினும் தேவை மெதுவான வேகத்தில் அதிகரித்து வருகின்றது. ஆக இனி வரும் மாதங்களில் இந்த குறியீடு இன்னும் வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.