2022ல் இந்திய அரசின் புதிய டிஜிட்டல் கரன்சி.. ரிசர்வ் வங்கி திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி இன்று தவிர்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் அனைத்து நாடுகளும் இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது. இந்தியாவிலும் இதே நிலை தான் சமீபத்தில் நடந்த நிதித்துறையில் நாடாளுமன்ற குழுவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யக் கூடாது ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் முடிவுகள் முன்வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி முற்றிலும் மாறுபட்டது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கிரிப்டோகரன்சி குறித்து மோடி கூட்டத்தில் முக்கிய முடிவா.. கடும் கட்டுப்பாடுகள் வரப்போகின்றதா?

 டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் கரன்சி

சீனா, ஐரோப்பாவில் டிஜிட்டல் கரன்சிக்கான சோதனை ஓட்டம் நடந்து வரும் நிலையில் அமெரிக்கா, இந்தியா உட்படப் பல நாடுகள் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் கரன்சி மூலம் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்ப முடியும், இதேபோல் யாரிடம் இந்தப் பணம் இருக்கிறது, எங்கெல்லாம் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதையும் கண்காணிக்க முடியும்.

பரிமாற்றம்

பரிமாற்றம்

அனைத்திற்கும் மேலாக மக்கள் இந்த டிஜிட்டல் கரன்சியை இண்டர்நெட் இல்லாமலே பரிமாற்றம் செய்யப்படும் சேவைகளும் உலக நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய டிஜிட்டல் கரன்சிகள் கருப்புப் பணம் அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு இது பெரிய அளவில் உதவும், இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்பும் கருப்புப் பணம் குறையாத காரணத்தால் இந்த டிஜிட்டல் கரன்சி உதவும் என நம்பப்படுகிறது.

 ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பேமெண்ட் மற்றும் செட்டில்மென்ட் பிரிவின் தலைமை நிர்வாகத் தலைவர் பி.வாசுதேவன் கூறுகையில், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் கரன்சிக்கான சோதனை ஓட்டம் துவக்கும். இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி மற்றும் அதன் அறிமுகத்திற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் எனப் பி.வாசுதேவன் கூறியுள்ளார்.

 டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன

ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும் டிஜிட்டல் கரன்சி என்பது தற்போது நாம் பயன்படுத்தி வரும் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக உருவாக்கப்படும் டிஜிட்டல் நாணயம். மேலும் இது ரூபாய் மதிப்பில் மட்டுமே இருக்கும் காரணத்தால் ரூபாய் மதிப்பில் எவ்விதமான மாற்றமும் இருக்காது, வழக்கம்போல் சந்தை நிலவரத்தைப் பொருத்து மாறும்.

ஆய்வு

ஆய்வு

ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சியை டிசம்பர் மாதமே அறிமுகம் செய்யத் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது 2022ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு வரையில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி தற்போது டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதிலும், பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதிலும் இருக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's New Rupee based digital currency pilot starts soon, India joining the race

India's New Rupee based digital currency pilot starts soon, India joining the race
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X