இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு 2023.. நிர்மலா சீதாராமனின் 3 முக்கிய தேர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை முக்கியக் கூட்டத்தில் பேசுகையில், ஜி20 கூட்டத்திற்கான தலைவர் பதவி அடுத்த ஆண்டு இந்தியாவுக்குக் கிடைக்கும் நிலையில், இக்கூட்டத்தில் உலகளாவிய கொள்கைகள், வரி விதிப்பு மற்றும் கடன் நெருக்கடி போன்ற பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் முக்கியத்துவம் பெறும் என அறிவித்தார்.

 

ஜி20 கூட்டத்திற்கான தலைவர் பதவி என்பது ஒவ்வொரு ஆண்டும் எந்த நாட்டில் ஜி20 மாநாடு நடக்கிறதோ, அந்த நாட்டுக்கு g20 presidency பதவி தற்காலிகமாக அக்காலகட்டத்திற்கு மட்டும் அளிக்கப்படும்.

அந்த வகையில் தற்போது இந்தோனேசியா விடமும், 2023ல் இந்தியாவிடமும், 2024ல் பிரேசில் நாட்டிற்கும் கிடைக்கும்.

ஜி20 பிரசிடென்சி

ஜி20 பிரசிடென்சி

இந்தியாவின் ஜி20 பிரசிடென்சி காலகட்டத்தில் எந்த விஷயத்தை விவாதிக்கப்பட வேண்டும்..? எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்..? என்பதை இந்தியா முடிவு செய்யலாம். அப்படி 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் உலகளாவிய கொள்கைகள், வரி விதிப்பு மற்றும் கடன் நெருக்கடி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

வரிவிதிப்பு போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒருமித்த கருத்தைக் கொண்டு வர முடியும் என்பதை ஜி-20 நிரூபித்துள்ளது என்று இன்றைய கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதன் மூலம் கடன் நெருக்கடி போன்ற முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்க வழி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

G20 கூட்டங்கள்
 

G20 கூட்டங்கள்

டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 20, 2023 வரை ஒரு வருடத்திற்கு G20 கூட்டத்தை இந்தியா தலைமையில் மேற்கொள்ளும். இக்காலகட்டத்தில் மொத்தம் 200 G20 கூட்டங்கள் இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும்.

09, 10 செப்டம்பர் 2023

09, 10 செப்டம்பர் 2023

வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) படி, மாநில தலைவர்கள் மற்றும் அரசு தலைவர்கள் மட்டத்தில் G20 தலைவர்களின் உச்சி மாநாடு 09 மற்றும் 10 செப்டம்பர் 2023 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தின் நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும்.

 G20 நாடுகள்

G20 நாடுகள்

G20 உலகின் முக்கிய வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார நாடுகள் மத்தியிலான ஒரு மன்றம். G20 என்பது அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அடங்கியது.

முக்கிய அமைப்புகள்

முக்கிய அமைப்புகள்


இக்கூட்டத்திற்கு IMF, ஐநா, உலக வங்கி, உலகச் சுகாதார அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு, OECD, சர்வதேச தொழிலாளர் அமைப்பு என உலகின் பல முக்கியமான அமைப்புகளும், அதன் உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

ஜி20 2022

ஜி20 2022

இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் குளேபல் ஹெல்த் ஆர்கிக்டசர், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன், சஸ்டையினபிள் எனர்ஜி டிரான்ஸ்சிஷன் ஆகியவற்றை முக்கியமான விஷயமாகக் கொண்டு ஆலோசனை செய்ய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's priorities for G20 2023 are global policies, taxation, debt distress: FM Nirmala Sitharaman

India's priorities for G20 2023 are global policies, taxation, debt distress: FM Nirmala Sitharaman
Story first published: Tuesday, November 1, 2022, 20:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X