14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.. சேவைத் துறையில் பலத்த அடி.. ஆதாரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், லாக்டவுனும் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து வணிகங்கள் பல பகுதிகளில் மூடப்பட்டுள்ளன.

 

இன்னும் சில இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் இருந்து வருகிறது.

இதனால் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், நிறுவனங்கள் முழுமையாக செயல்பட முடியாது என்பதே உண்மை.

14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு

14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு

இதன் காரணமாக இந்தியாவின் சேவைத் துறையானது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் லாக்டவுன் காரணமாக வணிகங்கள் கட்டாயம் மூடப்படுள்ளன. அதேசமயம் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

கடுமையான சரிவு

கடுமையான சரிவு

இதன் காரணமாக சேவைகள் குறித்தான பர்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் (services Purchasing Managers' Index) கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.4 ஆக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 49.3 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தரவு பகுப்பாய்வு நிறுவனமான IHS Markit கடந்த டிசம்பர் 2005ல் இருந்து தரவுகளை சேமிக்க தொடங்கியதில் இருந்து, சேவைத் துறை குறித்தான வெளியீட்டில் மிகக் கடுமையான சரிவினைக் கண்டுள்ளது.

உற்பத்தி துறை குறியீடு
 

உற்பத்தி துறை குறியீடு

இதில் சேவையைத் துறையின் மந்த நிலையானது உற்பத்தி துறையினை விட அதிகமாக இருப்பதாகவும் மேற்கண்ட இந்த தரவு சுட்டிக் காட்டியுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் உற்பத்தி துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு ஏப்ரல் மாதத்தில் 27.4 ஆக சரிந்துள்ளது. இதே மார்ச் மாதத்தில் 51.8 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகள் தளர்வு

கட்டுப்பாடுகள் தளர்வு

இது இந்தியா பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு வீழ்ச்சியினைக் காணும் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. எனினும் லாடவுனுக்கு பிறகு பொருளாதாரம் படிப்படியாக உயரத் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது வரையில் மே 17 வரையில் மேலும் மூன்றாவது முறையாக லாக்டவுனை நீட்டித்துள்ளது. எனினும் மூன்றாவது லாக்டவுனில் பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்காக சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

நிச்சயம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்

நிச்சயம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்

குறிப்பாக பச்சை ஆரஞ்சு மண்டலங்களில் இந்த தளர்வுகள் உள்ளன. எப்படி இருப்பினும் நிச்சயம் பொருளாதாரத்தில் நிச்சயம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்படி ஒரு நிலையில் தான் பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தினை குறைத்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s service sector registered its lowest in 14 years to april amid lockdown

India’s services PMI was registered 5.4 in April amid lockdown from 49.3 in March.
Story first published: Wednesday, May 6, 2020, 14:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X