இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு உயர்வு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா - பொருளாதார ரீதியில் நடுத்தர மக்கள் அதிகம் வாழும் நாடு என்பது தான் பொதுவான கருத்து ஆனால் சமீபத்தில் நாட்டில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பல பொருளாதாரச் சிக்கல்களையும் தாண்டி உயர்ந்துள்ளது.

 

இதோடு நாட்டின் பணக்காரர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு உயரும் என உலகின் முன்னணி பணக்காரர்கள் குறித்து ஆய்வு செய்யும் Knight Frank நிறுவனம் கூறுகிறது.

இந்தியா பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் போது இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது உங்களுக்குத் தெரியுமா..!!

இந்திய பொருளாதாரம் 2019

இந்திய பொருளாதாரம் 2019

சர்வதேச பொருளாதாரப் பிரச்சனைகளின் எதிரொலி, இந்தியப் பொருளாதாரத்தின் மோசமான வளர்ச்சி, வேலைவாய்ப்பு சரி, வரி வசூலில் சரிவு என நாட்டின் பொருளாதாரம் 10 வருடச் சரிவில் இருந்து கடந்த ஆண்டு. ஆனால் இந்த மோசமான சூழ்நிலையிலும் சுமார் 51 சதவீத பெரும் பணக்காரர்களின் (Ultra-wealthy Indians) சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

73 சதவீத உயர்வு

73 சதவீத உயர்வு

Ultra high-net-worth individuals எனப்படும் பணக்கார தனிநபர் எண்ணிக்கை இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் சுமார் 73 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2019ஆம் ஆண்டு வெறும் 5,986ஆக இருந்த இந்தியப் பணக்காரர்களின் எண்ணிக்கை 10,354 ஆக உயரும் என க்னைட் பிராங்க் வெல்த் ரிப்போர்ட் 2020 அறிக்கை கூறுகிறது.

இயல்பு நிலை
 

இயல்பு நிலை

இந்த அறிக்கையின் படி தற்போது சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மூலம் நாட்டின் வளர்ச்சி குறைந்தாலும், வலிமையான நீண்ட கால வளர்ச்சிக்கு இது வித்திடும் என உலகளாவிய பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் 2022ஆம் ஆண்டு நாட்டின் மொத்த ஜிடிபி 7 சதவீதத்தை அடையும் இதன் எதிரொலியாகவே இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனக் கருத்து நிலவுகிறது.

 

ஆசியா

ஆசியா

க்னைட் பிராங்க் வெல்த் ரிப்போர்ட் 2020 ஆய்வின் படி அடுத்த 5 வருடத்தில் ஆசியாவில் தான் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயரும் எனத் தெரிவித்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்காவைக் காட்டிலும் ஆசியாவில் 2024ஆம் ஆண்டுக்குள் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 44 சதவீதமாக உயரும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியா தான் டாப்பு

இந்தியா தான் டாப்பு

இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் வளர்ச்சி 73 சதவீதமாக இருக்கும் என இந்த ஆய்வு கூறுகிறது. இந்தியாவைத் தொடர்ந்து வியட்நாம் 64 சதவீதமும், சீனா 58 சதவீதமும், இந்தோனேசியா 57 சதவீதமாக இருக்கும் என knight Frank ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு குறைந்தபட்சம் 30 மில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை வைத்துள்ளவர்களைப் பெரும் பணக்காரர்கள் என அளவு கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது.

 

முக்கியச் சொத்து முதலீடு

முக்கியச் சொத்து முதலீடு

இந்திய பெரும் பணக்காரர்கள் பொருத்த வரையில் பங்கு முதலீட்டைத் தான் பெரிய அளவில் நம்புகின்றனர். இந்திய பெரும் பணக்காரர்கள் தங்களது முதலீட்டில் 29 சதவீத முதலீட்டைப் பங்குகளிலும், 21 சதவீத பணத்தைப் பாண்டு பத்திரங்களிலும், 20 சதவீத பணத்தை அசையா சொத்துக்களிலும் முதலீடு செய்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's super rich population to grow 73% over 5 years

Despite rising geopolitical tensions, slow growth forecasts and uncertainty remaining the norm in 2019, 51% of the Ultra-wealthy Indians experienced an increase in their fortune. The number of Ultra high-net-worth individuals (UHNWIs) in India is estimated to grow by a whopping 73% in the next five years, almost doubling the count to 10,354 from 5,986 in 2019.
Story first published: Friday, March 6, 2020, 11:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X