நபிகள் நாயகம் குறித்துப் பிஜேபி கட்சியைச் சேர்ந்த நுபுர் சர்மா-வின் சர்ச்சையான பேச்சுக்குப் பின்பு அரபு நாடுகள் இந்தியாவுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது மட்டும் அல்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அறிவிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நுபுர் சர்மா பிஜேபி கட்சியில் நீக்கப்பட்டார்.
இந்தப் பிரச்சனையின் போது குவைத் நாட்டில் இருக்கும் சூப்பர் மார்கெட்டில் இருக்கும் இந்திய பொருட்களை விற்பனை செய்வதைப் பல கடைகள் தடை செய்தது.
இந்தப் பதற்றமான சூழ்நிலை தணிந்து இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் குவைத் இந்தியாவில் இருந்து டன் கணக்கில் மாட்டுச் சானத்தை வாங்குகிறது.
எதற்காகத் தெரியுமா..?
பணத்தை அச்சடிக்க 5000 கோடி செலவு செய்த ஆர்பிஐ.. பணமதிப்பிழப்புக்கு பின் இதுதான் அதிகம்..!

மாட்டுச் சாணம்
ஜெய்ப்பூர்-ஐ தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு நிறுவனம் குவைத்-க்கு மாட்டுச் சாணத்தை ஏற்றுமதி செய்யத் தயாராக உள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் முறையாகச் செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.

192 மெட்ரிக் டன் சாணம்
குவைத்-ஐ சேர்ந்த லாமோர் (LAMOR) நிறுவனம் சுமார் 192 மெட்ரிக் டன் நாட்டு மாட்டுச் சாணத்தை இறக்குமதி செய்ய ஆர்டர் செய்துள்ளது. இந்தியா வளைகுடா நாடுகள் மத்தியில் பல பிரிவில் வர்த்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மாட்டு சானத்தையும் ஏற்றுமதி செய்யத் துவங்கப்பட்டு உள்ளது.

சன்ரைஸ் அக்ரிலேண்ட்
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சன்ரைஸ் அக்ரிலேண்ட் மற்றும் டெவலப்மென்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த ஆர்டரைப் பெற்றுள்ளது என்று இந்திய கரிம உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தேசிய தலைவர் அதுல் குப்தா தெரிவித்து உள்ளார்.

ஜூன் 15
சன்ரைஸ் அக்ரிலேண்ட் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் சதுர்வேதி கூறுகையில் தற்போது மாட்டுச் சானத்தைக் கண்டைனர்களில் பேக் செய்யும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும், முதல் டெலிவரி ஜூன் 15ஆம் தேதி கனகப்பூரா ரயில்வே நிலையத்தில் இருந்து அனுப்பப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விலங்கு பொருட்களின் ஏற்றுமதி
2020-21 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து விலங்கு பொருட்களின் ஏற்றுமதி ரூ.27,155.56 கோடியாக இருந்தது. இது தவிர இந்தியாவின் ஆர்கானிக் உரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல உலக நாடுகள் இந்திய மாட்டுச் சாணத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குப் பிறகு, பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடுமையான நோய்களிலிருந்து மனிதர்களை விடுவிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர் என அதுல் குப்தா கூறுகிறார்.

மாட்டுச் சாணம் ஏற்றுமதி
பல நாடுகள் இந்தியாவில் இருந்து இயற்கை உரத்துடன் உள்நாட்டு மாட்டு சாணத்தையும் இறக்குமதி செய்யத் தொடங்கியதற்கு முக்கியக் காரணம் என இந்திய கரிம உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தேசிய தலைவர் அதுல் குப்தா தெரிவித்து உள்ளார்.

குவைத் வேளாண் துறை
குவைத்தின் வேளாண் விஞ்ஞானிகள், விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, பேரீச்சம்பழ வளர்ப்பில் நாட்டுப் பசுவின் சாணத்தைப் பொடியாகப் பயன்படுத்துவதால், பழங்களின் அளவு அதிகரிப்பதோடு, உற்பத்தியும் எதிர்பார்த்த அளவு அதிகரிப்பதைக் கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார்.

மாலைதீவு, அமெரிக்கா, மலேசியா
உலகிலேயே இந்தியா தற்போது மாட்டுச் சாணத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக விளங்குகிறது, இதோடு பெரும்பாலான ஏற்றுமதிகள் மாலைதீவுகள், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல துவங்கியுள்ளது. தற்போது குவைத் இப்பட்டியலில் இணைந்துள்ளது.