இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டை விடவும் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில் நிதி பற்றாக்குறை குறைத்துக் கேள்விகள் அடுத்தடுத்த எழுந்து வந்த நிலையில் சில வாரங்களுக்குச் செலவுகளைக் குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானாது.
இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கு குறித்துத் தற்போதைய நிலையில் கவலைப்படப் போவது இல்லை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான செலவுகள் அனைத்தும் அரசு தொடர்ந்து செய்யும் என மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிராமங்களுக்கு சூப்பர் திட்டம்.. அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்..!

நிதி பற்றாக்குறை
நிதி பற்றாக்குறை அளவை குறைக்க வேண்டும் என்பதற்காகச் செலவுகளைக் குறைக்கத் திட்டம் இல்லை. மேலும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிறப்பான நிதி நிலையை உருவாக்கி வருகிறது என மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி
நாட்டின் பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில் நிதி பற்றாக்குறை குறைத்துக் கவலைப்படப் போவதில்லை, ஆனால் பொருளாதார வளர்ச்சிக்காகச் செலவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகவும் கட்டாயமாகவும் உள்ளது எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை அரசின் செலவுகளை ஆய்வு செய்து அரசு நிறுவனங்களைச் செலவு செய்யும் அளவீட்டை உயர்த்தப்பட்டு வருகிறது.

30 லட்சம் கோடி ரூபாய்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கொரோனாவால் பாதித்த நிறுவனங்கள், இழந்த வேலைவாய்ப்பு ஆகியவற்றை மீட்டு எடுக்கச் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிதி பற்றாக்குறை அளவு
மத்திய அரசின் கூடுதல் செலவுகள் மற்றும் சரிந்து வரும் வரி வருமானம் ஆகியவை நாட்டின் நிதி பற்றாக்குறை அளவை ஜிடிபி-யில் 8 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இது பட்ஜெட் அறிவிக்கப்பட்ட 3.5 சதவீதத்தை விடவும் 2 மடங்கு அதிகமாகும்.

பட்ஜெட் அறிக்கை
பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், தற்போது சந்தையில் உருவாகியுள்ள வர்த்தக வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி காரணிகளைச் செலவுகளைக் குறைக்கப்படுவதன் மூலம் இழக்க முடியாது. எனவே செலவுகள் மற்றும் வளர்ச்சி காரணிகளில் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.