வாழ்த்துக்கள் பிரதமரே! சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஆட்டோமொபைல் துறையில் படு பயங்கரமாக பேசப்பட்டு வந்த பாரத் ஸ்டேஜ் 6 எமிஷன் கட்டுப்பாடுகளைப் பற்றிப் படித்து இருப்போம்.

வரும் ஏப்ரல் 01, 2020 முதல் பாரத் ஸ்ஏஜ் 4 ரக வாகனங்களை இந்தியாவில் விற்கக் கூடாது.

அதற்கு பதிலாக குறைந்த அளவு மட்டுமே காற்றை மாடுபடுத்தும் பாரத் ஸ்ஏஜ் 6 ரக வாகனங்களைத் தான் விற்க வேண்டு என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

எரிபொருள் மாற்றம்

எரிபொருள் மாற்றம்

வாகனத்தினால் ஏற்படும் காற்ரு மாசைக் குறைக்க, வாகனங்களின் இன்ஜின்களை மட்டும் மாற்றி வடிவமைத்தால் வேலைக்கு ஆகாது. பாரத் ஸ்டேஜ் 6 ரக வாகனங்களில் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசலின் தரமும் உயர வேண்டும். இப்போது எரிபொருள் நிறுவனங்கள், இந்த புதிய பாரத் ஸ்டேஜ் 6 ரக பெட்ரோல் டீசலை நாடு முழுக்க கொடுக்க இருக்கிறார்களாம்.

பெட்ரோல் ரகம்

பெட்ரோல் ரகம்

வரும் ஏப்ரல் 2020 முதல், உலகின் சுத்தமான பெட்ரோல் டீசலை, இனி இந்தியா முழுக்க வழங்கத் இருக்கிறார்களாம். இந்த புதிய பெட்ரோல் டீசலின் யூரோ 6 ரகத்தைச் சேர்ந்ததாம். இந்த ரக பெட்ரோல் டீசலில், சல்ஃபரின் அளவு 10 parts per million தான் இருக்குமாம். இந்த ரக பெட்ரொல் டீசல்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் பெட்ரோல் டீசல் தரத்துக்கு ஒத்து இருக்குமாம்.

என்ன சிறப்பு

என்ன சிறப்பு

இந்த புதிய பாரத் ஸ்டேஜ் 6 அல்லது யூரோ 6 ரக பெட்ரோல் மற்றும் டீசலை, பாரத் ஸ்டேஜ் 6 ரக வாகனங்களில் பயன்படுத்தினால், பெட்ரோல் வாகனங்கள் வெளியிடும் நைட்ரஸ் ஆக்ஸைடில் 25% குறையுமாம். டீசல் வாகனங்கள் வெளியிடும் நைட்ரஸ் ஆக்ஸைட் சுமார் 70% வரை குறையுமாம்.

பாரத் ஸ்டேஜ் மாற்றம்

பாரத் ஸ்டேஜ் மாற்றம்

கடந்த 2010-ம் ஆண்டு தான் யூரோ 3 ரக பெட்ரோல் டீசலை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது. இந்த அரசு பெட்ரோல் டீசலில் 350 parts per million சல்ஃபர் இருக்குமாம். 2017-ம் ஆண்டு தான் யூரோ 4 அல்லது பாரத் ஸ்டேஜ் 4 ரக எரிபொருளை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது. இதில் 50 parts per million சல்ஃபர் இருக்குமாம்.

மூன்றே ஆண்டுகளில் பி எஸ் 6

மூன்றே ஆண்டுகளில் பி எஸ் 6

2017-ம் ஆண்டில் பாரத் ஸ்டேஜ் 4 ரக எரிபொருளில் இருந்து, அடுத்த மூன்றே ஆண்டுகளில் 2020-ல் இந்தியா பாரத் ஸ்டேஜ் 6 அல்லது யூரோ 6 ரக எரி பொருளை பயன்படுத்த இருக்கிறது. இப்படி உலகின் எந்த ஒரு பெரிய நாடும் செய்யவே இல்லை எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இந்தியாவின் மொத்த எரிபொருள் சந்தையில் சுமாராக பாதிக்கு மேல் இவர்களிடம் தான் இருக்கிறது. இவர்களின் எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலைகள், கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியிலேயே, பெரும்பாலும் இந்த புதிய பாரத் ஸ்டேஜ் 6 ரக பெட்ரோல் மற்றும் டீசலைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to switch to BS6 petrol, diesel from April 1, 2020

The bharat stage 6 type of petrol and diesel is going to be in use from april 01, 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X