இந்தியாவில் இது கோடைக்காலம் என்பதால் மின் விசிறி, ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால் இவை இயங்க தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம் தேவையான நிலக்கரி இருப்பும் இல்லை.
எனவே விலை அதிகம் என்றாலும் எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மின்சார உற்பத்தி
இந்தியாவின் மின்சாரத் தேவையில் 71 சதவீதம் நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரமே பூர்த்தி செய்து வருகிறது. மீதம் உள்ள 31 சதவீத மின்சாரத் தேவை எரிவாயு, சூரிய மின் சக்தி மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கிறது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இது கோடைக்காலம் என்பதால் மின்சாரத் தேவை அதிகரித்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின்சார பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிலக்கரியை முன்னரே திட்டமிட்டு இறக்குமதி செய்யாதது தான் காரணம் என ஆளும் அரசுகளை எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
எரிவாயு மூலம் மின்சாரம்
இந்நிலையில் தற்போது ஏற்பட்டு வரும் மின்சார பற்றாக்குறையைச் சமாளிக்க இந்திய அரசு எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் எரிவாயு மூலம் 4 சதவீத மின்சார தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இப்போது அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டாலும் எவ்வளவு அதிகரிக்க முடியும் எனத் தெரியவில்லை.
எரிவாயு விலை
உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வருவதால் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த சமயத்தில் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரித்தால் அதிக செலவாகும் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் கெயில் நிறுவனம் உதவியுடன் எரிவாயு கார்கோவை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மே மாதம் இறுதியில் முதல் கார்கோ இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானிலும் இப்போது வெயில் காலம் என்பதால் அங்கு ரம்ஜான் வாரம் மின்சார தட்டுப்பாட்டைக் குறைக்க எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுச் சமாளித்தது. இப்போது மேலும் ஜூன் மாதம் 2 கார்கோ எரிவாயு வாங்க டெண்டர் கோரியுள்ளது.
இப்போது பாகிஸ்தானைப் பின்பற்றி இந்தியாவும் மின்சார தட்டுப்பாட்டைக் குறைக்க விலை அதிகம் என்றாலும் எரிவாயுவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications