கேபிஎன் இன்டர்சிட்டி, எஸ்ஆர்எஸ் சூப்பர் பாஸ்ட்.. இப்படியும் இனி ரயில் ஓடுமோ.. வந்தாச்சு பிரைவேட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் உள்ள 100 ரயில் வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இனி தனியார் பஸ்கள் மாதிரி, தனியார் ரயில்கள் நாட்டில் ஓடப்போகுது பாஸ்.

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. டெல்லி மற்றும் மும்பை, ஹவுரா-டெல்லி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வழித்தடங்களில், தேஜாஸ் ரயில்களை சோதனை முறையில் இவ்வாறு இயக்கி பார்த்து வருகிறது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்.

இந்த நிலையில்தான், ரயில் வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்குவதற்கு அனுமதிப்பது தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஒரு குழுவை அமைத்து இருந்தார். அந்த குழு தனது அறிக்கையை தற்போது அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

வாவ்.. சூப்பர் ரூல்.. பாஸ்டாக் இருக்கா.. இது மட்டும் நடந்தால், டோல்கேட்டில் ஃப்ரீ.. ஃப்ரீ.. ஃப்ரீவாவ்.. சூப்பர் ரூல்.. பாஸ்டாக் இருக்கா.. இது மட்டும் நடந்தால், டோல்கேட்டில் ஃப்ரீ.. ஃப்ரீ.. ஃப்ரீ

150 ரயில்கள்

150 ரயில்கள்

மொத்தம் 100 வழித்தடங்களில் சுமார் 150 தனியார் ரயில்களை இயக்குவதற்கு இந்த குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா நடுவேயான வழித்தடங்களும் அடங்கும். ராஜதானி எனப்படும் அதிவேக ரயில்களுக்கு, போட்டியாக இந்த தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

தனியார் ரயில்களை இயக்கி கொள்ள, உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கலாம் என்று இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற ரயில்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வேண்டுமானால் காலதாமதமாக ரயில்கள் இயக்கப்படலாமே தவிர அதற்கு மேல் தாமதமாக இயங்கினால், பயணிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற கடும் கெடுபிடிகள் இந்த விதிமுறைகளில் உள்ளன.

160 கி.மீ வேகம்
 

160 கி.மீ வேகம்

டெல்லி மற்றும் மும்பை டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இரு வழித்தடங்களில் நடுவே தனியார் ரயில்கள் இயக்கப்படும். அதற்கான சாத்தியக் கூறு அதிகமாக இருக்கிறது. இந்த வழித்தடங்களில் உள்ள தண்டவாளங்கள் 2021 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக மேம்படுத்தப்படும் என்பது இதற்கு ஒரு காரணம். இந்த வழித்தடங்களில் ரயில்கள் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். தனியார் ரயில்களுக்கான உட்சபட்ச வேக அளவாக 160 கி.மீ.தான் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல விதிமுறைகள்

பல விதிமுறைகள்

தனியார் ரயிலுக்காக ஒதுக்கப்படும் நேரத்தில் இருந்து 15 நிமிடங்களுக்கு உள்ளாக அரசு ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் வருவாய் பாதிக்கப்படும் என்று தனியார் ரயில் உரிமையாளர்கள் பயப்பட வேண்டாம் என்ற உறுதி அரசால் வழங்கப்பட்டுள்ளது. தனியார் ரயில் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம், எந்தெந்த ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இன்ஜின்கள்

இன்ஜின்கள்

ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்களை எங்கே இருந்து வாங்குவது என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம் .அதே நேரம் இந்திய ரயில்வே தர கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இவை இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. ஒப்பந்தம் வழங்கப்பட்ட ஐந்து வருடங்களுக்குள் ரயில் இயக்கப்பட்டாக வேண்டும் என்பதும் இதில் உள்ள மற்றொரு விதிமுறை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India will have 150 private trains on 100 routes

India will have 150 private trains on 100 routes, as panel given green signal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X