12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா வைரஸ் படு வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்கால மருந்து தேவையை கருத்தில் கொண்டும் சில மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு, முன்னதாக மத்திய அரசு தடை விதித்து இருந்தது.

Recommended Video

ஒரே மருந்து தான்... இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும் உலக நாடுகள்
 

இதனால் மருந்து தட்டுப்பாடு வராமல் இருக்க சில ஆன்டிபயாடிக்ஸ், விட்டமின் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் தற்போது கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில் இந்தியா இதற்கு அனுமதி கொடுக்க காரணம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

வருமானமின்றி தவிக்கும் கிராமவாசிகள்.. ரேஷன் கார்டு இல்லை.. உணவு பொருள் இல்லை.. பசியால் மக்கள்..! வருமானமின்றி தவிக்கும் கிராமவாசிகள்.. ரேஷன் கார்டு இல்லை.. உணவு பொருள் இல்லை.. பசியால் மக்கள்..!

மருந்து மூலப்பொருள்

மருந்து மூலப்பொருள்

சீனாவிடமிருந்து இந்தியா சுமார் 57 வகையான மருந்து மூலதன மூலக்கூறுகளை இறக்குமதி செய்கிறது. அதில் 19 வகையான மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே சார்ந்துள்ளது. எனினும் ஏப்ரல் வரையில் தாக்குபிடிக்கும் வகையில் மருந்து மூலப் பொருட்களை சீனா விநியோகம் செய்துள்ளது. ஆனால் அதன் பிறகு என்ன செய்யப்போகிறது.

மருந்து தட்டுப்பாடு

மருந்து தட்டுப்பாடு

ஏனெனில் சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீனாவிலிருந்து மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி எதுவும் செய்யப்படவில்லை. இதனால் இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது.

மத்திய அரசு தடை
 

மத்திய அரசு தடை

இந்த நிலையில் கொரோனாவிற்காக கொடுக்கப்படும் இந்த ஹைட்ரோகுளோரோகுயின் உள்ளிட்ட பல மருந்து ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் 12 முக்கிய அத்தியாவசிய மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

என்னென்ன மருந்துகளுக்கு தடை நீக்கம்

என்னென்ன மருந்துகளுக்கு தடை நீக்கம்

குறிப்பாக டினிடாசோல், மெட்ரோனிடசோல், அசைக்ளோவிர், வைட்டமின் பிஐ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12, புரோஜெஸ்டிரோன், குளோராம்பெனிகால், எரித்ரோமைசின், கிளிண்டமைசின் மற்றும் ஆர்னிடாசோல் உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. ஆனால், பாராசிட்டமால் மருந்து ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படவில்லை.

அரசு கருத்தில் கொள்ள வேண்டும்

அரசு கருத்தில் கொள்ள வேண்டும்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், அங்கு இந்த அத்தியாவசிய மருந்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இது சிறந்த ஏற்றுமதி வாய்ப்பாக கருதப்பட்டாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவினால் அரண்டு போயுள்ள நிலையில், அரசு அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India withdraws export ban on 12 essential medicines amid-coronavirus-pandemic

India withdrawn the ban imposed on 12 import medicines and raw materials.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X