இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்! CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி (Gross Domestic Product) கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, இந்த ஏப்ரல் 2020 - ஜூன் 2020 காலாண்டில் 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

இந்த பொருளாதார சரிவில் இருந்து எப்படி மீளப் போகிறோம், யார் மீட்டு எடுப்பார்கள்? எப்போது மீண்டு வருவோம் என எதுவும் தெரியவில்லை.

இந்திய அரசாங்கத்தின் சீர்திருத்தங்களால், கொரோனா வைரஸ் பிரச்சனைக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என முதன்மைப் பொருளாதார ஆலோசகர் (Chief Economic Advisor) கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சமீபத்தில் சி ஐ ஐ அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் சொல்லி இருக்கிறார்.

சீர்திருத்தங்கள்
 

சீர்திருத்தங்கள்

இந்த கொரோனா வைரஸ் நம்மைக் கடந்து போகும். எப்போது மத்திய அரசு அறிவித்த சீர்திருத்தங்கள் வெளிப்படத் தொடங்குகிறதோ, அப்போது நாம் கட்டாயம் வளர்ச்சிப் பாதையில் இருப்போம் என Connect 2020 சி ஐ ஐ அமைப்பினர் நடத்திய கூட்டத்தில், நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.

பாசிட்டிவ்

பாசிட்டிவ்

இதற்கு முன்பும், நாம் இது போன்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து இருக்கிறோம். இந்தியாவின் முக்கிய துறைகளான சிமெண்ட், ஸ்டீல், ரயில்வே சரக்கு சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு டெக்னாலஜிகள் எல்லாம், பாசிட்டிவ்வாக இருக்கிறது. உற்பத்தி பி எம் ஐ மற்றும் சேவை பி எம் ஐ இரண்டுமே அதிகரித்து இருக்கிறது.

தொழிலாளர் சட்டம்

தொழிலாளர் சட்டம்

தொழிலாளர் சட்டங்களில் (Labour Law) சில திருத்தங்களைக் கொண்டு வருமாறு, மத்திய அரசு, மாநில அரசுகளுக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறது. பல மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் 100 ஆண்டு பழமையானதாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் CEA கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன்.

Compliance பிரச்சனை
 

Compliance பிரச்சனை

தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் கூலிகளை பல்வேறு முறைகளில் கணக்கிடுவதால், அனைத்து மாநிலங்களிலும் இணக்கமாவது சிரமமாகிறது. தற்போது பல மாநிலங்கள், தங்களின் தொழிலாளர் நலச் சட்டங்களில், சில மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் சொல்லி இருக்கிறார் முதன்மைப் பொருளாதார ஆலோசகர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India would be back to the growth path through reforms CEA Krishnamurthy Subramanian

The CEA of India Mr Krishnamurthy Subramanian said that the indian economy would be back to the growth path through reforms announced by the central government.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X