மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்தை விற்கும் இந்தியாபுல்ஸ்.. பெங்களூர் நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தனது மியூச்சுவல் பண்ட் வர்த்தகம் முழுவதையும் விற்பனை செய்துவிட்டு மொத்த கவனத்தையும், முதலீட்டையும் தனது முக்கியக் கடன் வர்த்தகமான ஹவுசிங் பிரிவில் போட முடிவு செய்துள்ளது.

அட்சய திருதியைக்கு சூப்பர் சான்ஸ்.. தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. நிபுணர்கள் பரிந்துரை..! அட்சய திருதியைக்கு சூப்பர் சான்ஸ்.. தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. நிபுணர்கள் பரிந்துரை..!

இதன் மூலம் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்தை மொத்தமாக வாடிக்கையாளர்களுடன் சேர்த்து நெக்ஸ்ட்பில்லியன் டெக்னாலஜி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Groww நிறுவனம்

Groww நிறுவனம்

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் நிதியியல் சேவையில் வேகமாக வளரும் Groww நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் நெக்ஸ்ட்பில்லியன் டெக்னாலஜி, இந்நிறுவனம் 2016 முதல் மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. 6 வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் துவங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகும்.

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் நெக்ஸ்ட்பில்லியன் டெக்னாலஜி நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் இந்தியாபுல்ஸ் அசர்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் மற்றும் (IAMCL) மற்றும் அதன் டிரஸ்டி நிறுவனமான இந்தியாபுல்ஸ் டிரஸ்டி கம்பெனி லிமிடெட் (ITCL) ஆகிய இரு நிறுவனங்களை 175 கோடி ரூபாய்க்கு Goww கைப்பற்ற உள்ளது.

175 கோடி ரூபாய் டீல்
 

175 கோடி ரூபாய் டீல்

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 175 கோடி ரூபாய் டீலில் 75 கோடி ரூபாய் தொகையைப் பணமாகவும், மீதமுள்ள 100 கோடி ரூபாய்க்குப் பணத்திற்கு ஈடானவற்றைக் கொடுக்க இருதரப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

மியூச்சுவல் பண்ட் வர்த்தகம்

மியூச்சுவல் பண்ட் வர்த்தகம்

இந்த விற்பனை மூலம் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மியூச்சவல் பண்ட் வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேறுகிறது. இதேவேளையில் இப்பிரிவு வர்த்தகத்தில் பெங்களூரு நிறுவனமான Groww வலிமை அடைகிறது.

1.5 கோடி வாடிக்கையாளர்கள்

1.5 கோடி வாடிக்கையாளர்கள்

Groww நிறுவனம் தற்போது 1.5 கோடி வாடிக்கையாளர்கள் உடன் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. மேலும் இதுவரை இந்நிறுவனம் சுமார் 59 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indiabulls exit mutual fund business: Sells MF assets to Groww for Rs 175 cr deal

Indiabulls exit mutual fund business: Sells MF assets to Groww for Rs 175 cr deal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X