ஊசலாடும் 29 லட்சம் விமான சேவை & அது சார்ந்த துறை வேலைகள்! தொடரும் கொரோனா விளைவுகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பாழாய் போன் கொரோனா வைரஸால், எப்போது பார்த்தாலும் வேலை இழப்புகள், சம்பளம் கட், லே ஆஃப் போன்ற செய்தி வந்து கொண்டே தான் இருக்கிறது.

 

இப்போதும் அப்படி ஒரு அதிர்ச்சிகரமான தகவலைத் தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்தியாவின் விமான சேவைத் துறையுடன் தொடர்புள்ள மற்ற பல துறைகளையும் சேர்த்து லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகள் அடி வாங்க இருபப்தாக ஒரு செய்தி வந்து இருக்கிறது.

கொரோனா லாக் டவுன்

கொரோனா லாக் டவுன்

கொரோனா வைரஸ் லாக் டவுனால், உலகம் முழுக்க விமான சேவைகள் வழக்கம் போல இல்லை. இந்தியாவில் மே 03, 2020 வரை விமான சேவைகள் ரத்து செய்து இருக்கிறார்கள். இந்த லாக் டவுனாl விமான சேவைத் துறை தொடங்கி, சுற்றுலா வரை பல துறைகள் பயங்கரமாக அடி வாங்கி இருக்கின்றன.

ஆசிய பசிபிக்

ஆசிய பசிபிக்

உலக அளவில் விமான சேவைத் துறையும் அது சார்ந்த துறைகளும் அடி வாங்கும் என்றாலும், அதிகம் அடி வாங்க இருக்கும் பகுதி ஆசிய பசிபிக் தானாம். இந்தியாவில் மட்டும் சுமாராக 29.32 லட்சம் வேலை வாய்ப்புகள் அடி வாங்கப் போகிறதாம். ஏற்கனவே இந்தியாவில் 47 % விமான பயணிகள் எண்ணிக்கை சரிந்து இருக்கிறதாம்.

வருவாய்
 

வருவாய்

அது போக இந்தியாவுக்கு விமானங்களை இயக்கும், விமான சேவை நிறுவனங்களுக்கு, சுமாராக 11.22 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு வேறு ஏற்படும் எனக் கணித்து இருக்கிறது சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (International Air Transport Association - IATA). இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமாராக 85,000 கோடி ரூபாய்.

உலக நஷ்டம்

உலக நஷ்டம்

உலக அளவில் விமான சேவை நிறுவனங்கள் சுமாராக 314 பில்லியன் டாலர் வருவாய் இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டி இருக்கிறது. இப்படி எங்கு பார்த்தாலும் நஷ்டம், சரிவு என்றால் வேலை வாய்ப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகத் தானே செய்யும். அது தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Aviation and related sectors 29 lakh jobs are at risk due to corona

The international Airline Transport Association said that the indian aviation and related sectors 29 lakh jobs are at risk due to coronavirus.
Story first published: Saturday, April 25, 2020, 17:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X