ATM வாடிக்கையாளர்களே.. இனி இந்த வங்கி ஏடிஎம்-ல் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வராது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2016 நவம்பர் 08ம் தேதியை பெரும்பாலான இந்தியர்களால் மறந்திருக்க முடியாது.

 

ஒரே இரவில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.

அடுத்த சில மணி நேரங்களில், மக்கள் செலவழிக்க, 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றத் தொடங்கினார்கள்.

இனி பிரஷ்-ஐ வாய்ல வெச்சா போதும்... அதுவே பல்லு விளக்கிக்கும்! எகிறி அடிக்கும் சியாமி!இனி பிரஷ்-ஐ வாய்ல வெச்சா போதும்... அதுவே பல்லு விளக்கிக்கும்! எகிறி அடிக்கும் சியாமி!

நீண்ட கூட்டம்

நீண்ட கூட்டம்

ஏடிஎம் இயந்திரங்களுக்கு முன், புதிய ரூபாய் நோட்டுக்களை எடுக்க மக்கள் கூட்டம் அலை மோதியது. கறுப்புப் பணம் எல்லாம் ஒழிந்துவிடும் என்றார்கள். ஆனால் மத்திய ரிசர்வ் வங்கியோ, பழைய நோட்டுக்களில் சுமார் 99 சதவிகித நோட்டுக்கள் திரும்ப வந்துவிட்டதாக கணக்கு சொன்னார்கள். இன்று வரை எந்த ஒரு பெரிய விஷயமும் இந்த டீமானிட்டைசேஷனால் நடந்ததாகத் தெரியவில்லை.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

இந்த லட்சணத்தில், மீண்டும், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களை வேறு புழக்கத்தில் விட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 17, 2020 அன்று, சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

நோ 2000 நோட்டு
 

நோ 2000 நோட்டு

பிப்ரவரி 17, 2020-ம் தேதி முதல், இந்தியன் வங்கியின் எந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்திலும், இனி 2,000 ரூபாய் நோட்டுக்கள் நிரப்ப வேண்டாம் என, இந்தியன் வங்கியின் டிஜிட்டல் பிரிவு சுற்றறிக்கையே வெளியிட்டு இருக்கிறார்களாம். ஏடிஎம் இயந்திரங்கள் மட்டுமின்றி cash recyclers இயந்திரத்திலும் 2,000 ரூபாய் நோட்டுக்களைத் தவிர்க்க இருக்கிறார்களாம்.

ஏன் கிடையாது

ஏன் கிடையாது

வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்-ல் கொடுத்தால் சில்லறை கேட்டு வங்கிக் கிளைகளுக்கே வருகிறார்களாம். இதை சமாளிக்கத் தான் 2,000 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்-ல் தவிர்க்கப் போகிறார்களாம். அப்படி என்றால் 2,000 ரூபாய் நோட்டுக்கு ஏதாவது பிரச்சனையா என்று பதற வேண்டாம்.

2000 ரூபாய் நோட்டு

2000 ரூபாய் நோட்டு

வங்கிக் கிளைகளுக்கே வந்து பணம் எடுப்பவர்களுக்கு வழக்கம் போல 2,000 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கப்படும். 2,000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்பவர்கள், வழக்கம் போல டெபாசிட் செய்யலாம். அவ்வளவு ஏன் ஏடிஎம்-ல் பணத்தை டெபாசிட் செய்பவர்கள் கூட வழக்கம் போல 2,000 ரூபாய் நோட்டுக்களைக் டெபாசிட் செய்யலாம். ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வரும் (Withdrawal) பணம் மட்டும் 2,000 ரூபாய் நோட்டாக வராது.

மாற்று

மாற்று

2,000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக நிறைய 200 ரூபாய் நோட்டுக்களை இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் பயன்படுத்த இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தியன் வங்கியின் இந்த யோசனை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு சில்லறைக்கு அல்லாடுவதற்கு பதிலாக 200 ரூபாய் நோட்டு என்றால் புழக்கத்துக்கு வசதியாக இருக்குமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian bank Customers wont get Rs 2,000 notes at their ATMs

Chennai based Indian bank ATM wont give 2,000 rupee currency. But 2,000 rupee notes will be used to branch withdrawal, Branch deposit and ATM cash deposit as usual.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X