இந்தியன் அமெரிக்க பாஸ் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புலிட்சர் பரிசு பெற்ற இந்திய அமெரிக்க ஆசிரியர் ஒருவர், வரவிருக்கும் பணி நீக்கங்களுக்கு மத்தியில், தனது தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். தனது சம்பளத்தில் இருந்து, மற்றவர்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பீட்டர் பாட்டியா டெட்ராய்ட் ப்ரீ பிரஸ்ஸின் (Detroit Free Press) ஆசிரியவர் ஆவார். இது ஊடக நிறுவனமான கேனட்டிற்கு சொந்தமான ஒன்றாகும்.

கடினமான காலகட்டம்

கடினமான காலகட்டம்

நடப்பு வாரத் தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் தனது வெளியேறும் முடிவினை அறிவித்தார். நாம் கடினமான பொருளாதார ரீதியிலான காலகட்டத்தில் உள்ளோம்.

பொருளாதாரம் சரிவில் உள்ள நிலையில் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. நான் பணியில் இருந்து விலகினால், பலரின் வேலை காப்பாற்ற முடியும். மற்றவர்களின் வேலையை காப்பாற்றும் நோக்கில் நான் எனது பணியில் இருந்து விலக முடிவு செய்தேன்,

சரியான விஷயம் தான்

சரியான விஷயம் தான்

எனக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. அல்லது ஒரு கட்டத்தில் அது செயல்படக் கூடும். ஆனால் என் சம்பளத்தின் மூலம் பலரின் வேலையை காப்பாற்ற முடியும். அதனால் நான் செய்தது சரியான விஷயம் என நான் நினைக்கிறேன் என்றும் பீட்டர் தெரிவித்துள்ளார். இது டெட்ராய்ட் ப்ரீ பிரஸ்-க்கும் நல்ல விஷயம் என நான் நினைக்கிறேன்.

செலவு குறைப்பு
 

செலவு குறைப்பு

பணி நீக்க நடவடிக்கையால் செய்தி அறையானது பாதிக்கப்படும் என்று கூறிய பீட்டர், இது குறித்து இந்த மாத தொடக்கத்திலேயே ஊழியர்கள் மத்தியில் அறிவித்தார். அந்த செலவு குறைப்பு நடவடிக்கையில் ஐந்து பத்திரிக்கையாளர்கள், 5 உதவி ஆசிரியர்கள், 3 இனைதள தயாரிப்பாளர்கள், 1 போட்டோகிராபர் என பலரும் இந்த பட்டியலில் அடங்குமாம். இதனால் தான் பாட்டியா செல்ல முடிவெடுத்ததாகவும், இவரின் இழப்பு சில ஊழியர்களை ஈடுசெய்ய உதவும் என கூறியதாகவும் தெரிகிறது.

நிச்சயமற்ற தன்மை, பதற்றம்

நிச்சயமற்ற தன்மை, பதற்றம்

அமெரிக்காவில் நிச்சயமற்ற தன்மையும் பதற்றமும் உள்ளது. ஆனால் பீட்டர் இப்படி ஒரு உன்னதமான செயலை செய்வார் என யாரும் நினைக்கவில்லை. உண்மையில் நம்மில் பலரும் இங்கு வேலை செய்வதற்கு அவர் தான் காரணம் என ப்ரீ பிரஸ்ஸின் கட்டுரையாலர் எல்ரிக் கூறியுள்ளார்.

 புலிட்சர் பரிசு யாருக்கு கிடைக்கும்?

புலிட்சர் பரிசு யாருக்கு கிடைக்கும்?

புகழ்பெற்ற இந்த புலிட்சர் பரிசானது ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு உள்ளிட்ட 21 துறைகளுக்கு வழங்கப்படும் ஒரு மிக உயரிய விருதாகும். இந்த விருதினை நியூயார்க் நகரத்தில் கொலம்பியா பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

யார் இந்த பாட்டியா?

யார் இந்த பாட்டியா?

பாட்டியாவின் குடும்பம் லக்னோவை சேர்ந்தது. அவர் பல செய்தி நிறுவனங்களில் வேலை செய்து அனுபவம் வாய்ந்தவர். இவர் கடந்த 2017ம் ஆண்டில் டெட்ராய்ட் ப்ரீ பிரஸ்ஸின் (Detroit Free Press) ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர் ஆக இணைந்தார். இவர் அமெரிக்காவில் உள்ள பல பத்திரிக்கைகளில் பணி புரிந்து விருதுகளை வென்றுள்ளார். ப்ரீ பிரஸ் நிறுவனத்தில் இருந்து எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட போகிறார்கள். எத்தனை பேர் பாட்டியாவுக்கு பதில் இருக்க போகிறார்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் என்பது எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian boss of America Press resigns to protect employees' jobs

An Indian American press editor stepped down from his leadership role amid impending layoffs. He said that from his salary, others can keep their jobs
Story first published: Sunday, December 25, 2022, 19:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X