இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் சீனா.. கவலையில் இந்திய நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகமே ஒரு புறம் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டுள்ள நிலையில், பல துறைகளில் டிஜிட்டல் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

India மீது Cyber தாக்குதல் நடத்தும் China | Oneindia Tamil

இது ஒரு வகையில் மிக நல்ல விஷயம் என்றாலும், மறுபுறம் சைபர் தாக்குதல்களும் இந்த நேரத்தில் அதிகரித்துள்ளதாக பயமுறுத்துகிறது ஒரு அறிக்கை.

அதிலும் குறிப்பாக இந்திய நிறுவனங்களை குறி வைத்து நிறைய சைபர் தாக்குதல் இருந்து வருவதாக கூறப்படுவது கவலையளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

2 கோடி வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு.. பிக்பேஸ்கட் நிறுவனத்தில் சைபர் அட்டாக்..!

இந்தியா மோசமாக பாதிப்பு
 

இந்தியா மோசமாக பாதிப்பு

ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே சைபர் தாக்குதலால், இந்தியா மிக மோசமாக பாதிக்கப்படடுள்ளது தெரிய வந்துள்ளது. நடப்பு ஆண்டில் 74 சதவீத நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதே ஆஸ்திரேலியாவில் 67 சதவீதமும், ஜப்பானில் 52 சதவீதமும், சிங்கப்பூர் நிறுவனங்கள் 46 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

திருடப்படும் தகவல்

திருடப்படும் தகவல்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்களால், மூன்றில் ஒரு பங்கு இந்திய நிறுவனங்கள் 1 - 2.5 மில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான

CrowdStrike கூறியுள்ளது. அது மட்டும் அல்ல, இந்த ஆய்வில் பாஸ்வேர்டு திருட்டு, மெயிலில் உள்ள ரகசிய தகவல்கள், மொபைல் வாய்ஸ் கால், மெசேஜ் உள்ளிட்டவற்றை திருடப்படுவது பல நிறுவனங்களுக்கு கவலையளிக்கும் விதமாக

பார்க்கப்படுகிறது.

சீனாவின் சைபர் தாக்குதல்

சீனாவின் சைபர் தாக்குதல்

இதற்கிடையில் 2021ம் ஆண்டில் இந்த தாக்குதல்கள் மிகப்பெரிய கவலையளிக்கும் விஷயமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றது. அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, சீனாவில் இருந்து தோன்றும் சைபர் தாக்குதல் இந்திய அமைப்புகளுக்கு பெரும் கவலையாக உள்ளன. இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் பலர், சீனாவிலிருந்து தோன்றியவர்களால் தான் அதிகம் அச்சுறுத்தப்படுவதாக உணர்வதாக கூறியுள்ளனர்.

பாகிஸ்தானும் பாதிப்பு
 

பாகிஸ்தானும் பாதிப்பு

இந்தியாவில் மட்டும் அல்ல, பாகிஸ்தானிலும் 48 சதவீதமும், ரஷ்யாவில் 43 சதவீதமும் சீனா ஹேக்கர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். நடப்பு ஆண்டு உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு சவாலான ஆண்டாகவே இருக்கும். எனினும் தற்போது நிறுவனங்கள் டிஜிட்டல் மாற்றத்தினை கண்டு வருகின்றன.

பிக்பாஸ்கட்டில் ஹேக்கர்கள் கைவரிசை

பிக்பாஸ்கட்டில் ஹேக்கர்கள் கைவரிசை

கடந்த வாரம் ஆன்லைன் மளிகை நிறுவனமான பிக்பாஸ்கெட், ஒரு பெரிய தரவு மீறலை சந்தித்தது. இதன் மூலம் 20 மில்லியனுக்கும் அதிகமானோரின் தரவுகள் கசிந்திருக்கலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது. இந்த தரவின் இந்தியா மதிப்பு 30 லட்சம் ரூபாய் என்றும் சைபிள் இன்க் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து தகவல்களை களவாட திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து தகவல்களை களவாட திட்டம்

இதே முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ் மற்றும் லூபின் நிறுவனங்களும் இந்த சைபர் தாக்குதலை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே சர்வதேச மருந்து நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்களை திருட ஹேக் செய்யப்பட்டதாகவும் லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றது.

நிறுவனங்களை எப்படி பாதுகாப்பது?

நிறுவனங்களை எப்படி பாதுகாப்பது?

இதே டெலிவரி ஸ்டார்டப் நிறுவனமான டன்சோவில், 3 லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது லாக்டவுன் காலத்தின் போது ஆன்லைன் டெலிவரி அதிகரித்த காலத்தில் வந்ததாகவும் தெரிகிறது. டிஜிட்டல்மயமாக்கல் அதிகரித்து வரும் இந்த நிலையில், ரான்சம்வேர்களின் ஆபத்தும் அதிகரிக்கிறது. ஆக நிறுவனங்கள் இவற்றையெல்லாம் தவிர்க்கும் விதமாக, தங்களது உள்கட்டமைப்புகளை கிளவுட், அவற்றில் நுண்ணறிவுகளை புகுத்துவதன் மூலம் தங்களது பாதுகாப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இணையம் வழியாக பரவும் ஹேக்கர்கள்

இணையம் வழியாக பரவும் ஹேக்கர்கள்

முன்னதாக வெளியான ஒரு அறிக்கையின் படி, இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக் பாயின்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் 93 சதவிகிதம் தீங்கிழைக்கும் வைரஸ்கள் இணையம் வழியாக பரவுவதாக தெரிய வந்தது. இது உலகளவில் 35% தீங்கிழைக்கும் வைரஸ்கள் உடன் ஒப்பிடும்போது இது மிக அதிகம் என்று கூறப்பட்டது.

எளிதாக இந்திய நிறுவனங்கள் பாதிப்பு

எளிதாக இந்திய நிறுவனங்கள் பாதிப்பு

இந்தியாவில் மிகவும் பொதுவான பாதிப்பு என்பது தகவல்களை சுரண்டும் ஒரு வகையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் Check Point's 2020 என்ற இந்த அறிக்கையில், 64% நிறுவனங்கள் மிக எளிதாக இந்த ஹேக்கர் மூலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக எக்ஸ்எம்ரிக் மூலம் 17% நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சைபர் கிரைம் அமைப்புகள் இதை துரிதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

உங்களது தகவல்கள் திருட்டு உங்களது தகவல்கள் திருட்டு

உங்களது தகவல்கள் திருட்டு உங்களது தகவல்கள் திருட்டு

இந்த இணைய மோசடிகளில் மால்வேர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. தொழில்நுட்ப ரீதியாக இது வைரஸ் என்று அழைக்கப்படும். மால்வேர் என்பது உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய ஒன்றாகும். இவை நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டர்களில் இருந்து மெயில், வங்கி கணக்குகள் குறித்த தகவல்களை திருடுவது ஆகும்.

எச்சரிக்கையா இருங்க பாஸ்

எச்சரிக்கையா இருங்க பாஸ்

தற்போதுள்ள நிலையில் 90% மேற்பட்ட நிறுவனங்கள் கிளவுட் சேவைகளையே பயன்படுத்துகின்றன. ஆனால் இதில் 67% பாதுகாப்பு குழுக்கள் தங்கள் கிளவுட் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் இணக்கம் ஆகியவற்றில் அவர்களின் பார்வை இல்லை என்றும் புகார் கூறுகின்றன. ஆக நிறுவனங்களாகட்டும்,தனி நபர்களாகட்டும் இணைய திருட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian companies firms concerned amid rising cyber attacks from china

Cyber attacks.. Indian companies firms concerned amid rising cyber attacks from china
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X