மீண்டும் WFH.. தலைதூக்கும் கொரோனா.. 'இந்த' துறைக்கு 'ரெட் அலர்ட்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவில் கொரோனா தொற்று ஏற்படுத்தி வரும் பாதிப்பு இந்தியாவிலும் தலைதூக்கத் துவங்கிவிட்டது என்றால் மிகையில்லை, இதன் எதிரொலியாகப் பல மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கத் துவங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்திய நிறுவனங்களும் முக்கியமான முடிவை எடுக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. உலகளவில் பொருளாதார மந்த நிலை உருவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ள வேளையில் கொரோனா தொற்றுப் பிரச்சனை பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வர்த்தகம், வருவாய், வாடிக்கையாளர்கள் என அனைத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடிவு செய்து உள்ளது.

30 ஆண்டு சரிவில் சீனா.. ஜி ஜின்பிங் சீட்-டுக்கு ஆபத்தா..? 30 ஆண்டு சரிவில் சீனா.. ஜி ஜின்பிங் சீட்-டுக்கு ஆபத்தா..?

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பாதிப்பு மூலம் ஏற்பட உள்ள பாதிப்பைத் தணிக்க முதல் கட்டமாகப் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது, அல்லது முற்றிலும் நிறுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் குளோபல் ரெசிஷன்,

குளோபல் ரெசிஷன்

குளோபல் ரெசிஷன்

இதேபோல் நான்காவது கொரோனா அலை இந்தியாவைத் தாக்கினால், சுற்றுலா, ஹாஸ்பிடாலிட்டி, போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கப் பரிசீலித்து வருகின்றன.இதேபோல் இத்துறைகளில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தற்போது ரெட் அலர்ட் (HIGH ALERT) உடன் இருப்பதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சர்வதேச விமான நிலையம்

டெல்லி சர்வதேச விமான நிலையம்

கடந்த வாரம், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கோவிட்-19 பரிசோதனையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

BF.7 உரு மாறுபட்ட கொரோனா தொற்று வைரஸ்-ஐ கட்டுப்படுத்த சீனா போராடிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பான், தென் கொரியா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் வழக்குகள் அதிகரித்து வருகிறது.

டிஜிட்டல் மற்றும் டெக் சேவை

டிஜிட்டல் மற்றும் டெக் சேவை

இதேவேளையில் டிஜிட்டல் மற்றும் டெக் சேவை நிறுவனங்களில் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. உதாரணமாகக் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் லாக்டவுன் அறிவித்தால் மீண்டும் டிஜிட்டல் சேவைக்கான டிமாண்ட் அதிகரிக்கும், அந்த வகையில் ஈகாமர்ஸ், EdTech, ஆன்லைன் கேமிங், லாஜிஸ்டிக்ஸ், பின்டெக் ஆகிய துறையில் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

பணி இயல்பு

பணி இயல்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் ஊழியர்களின் பணி இயல்பு பாதிக்கப்படும், பயணங்கள் பாதிக்கப்படும், நிறுவனங்கள் புதிதாகச் சேர்க்கும் ஊழியர்கள் எண்ணிக்கை பாதிக்கப்படும் என டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு சேவை அளிக்கும் Xpheno இணை நிறுவனர் கமல் கர்நாத் தெரிவித்துள்ளார்.

2 வருட

2 வருட

பல நிறுவனங்கள் 2 வருடத்திற்குப் பின்பு ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியா கொரோனா அச்சம் அதிகரித்துள்ளதால் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் தொடர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian companies may bring back WFH; If india hit with 4th Covid wave few sectors on high alert

Indian companies may bring back WFH; If india hit with 4th Covid wave few sectors on high alert
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X