இந்திய மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் சூறையாடக் காத்திருக்கும் கொரோனா வைர்ஸை ஒழிக்க மத்திய மாநில அரசுகளும் போராடி வருகிறது. அரசுக்கு உதவி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் பல கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து வருகின்றனர். இதன் பின் பிரதமரும் நாட்டு மக்களை நன்கொடை கொடுத்து நாட்டைக் காப்பாற்ற அழைப்பு விடுத்த நிலையில் மக்களும் நன்கொடை கொடுத்து வருகின்றனர்.
Recommended Video
மக்களுள் மக்களாகப் பல முன்னணி பிரபலங்களும் அதிகளவிலான நிதியை நன்கொடை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மக்கள் அனைவரும் பிடித்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எவ்வளவு நன்கொடுத்துள்ளார்கள் என்பதைப் பார்போம் வாங்க.
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்-இன் கடவுள் என இன்று வரையில் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் என மொத்த 50 லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
இதோடு டிவிட்டரிலும் மக்களை விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வீடியோ பதிவிட்டுள்ளார்.
சௌரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியில் சிற்பி மற்றும் BCCI தலைவருமான சௌரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசியைப் பாதிக்கப்பட்டோருக்கும், தேவைப்படுவோருக்கும் நன்கொடையாகக் கொடுக்க உள்ளார். இதை லால் பாபா அரிசி நிறுவனத்துடன் இணைந்து அரிசியை மக்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா
சிஎஸ்கே அணியின் சின்னத் தல என அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா பிரதமர் நிவாரண நிதிக்கு 31 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 21 லட்சம் என மொத்தம் 52 லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
கெளதம் கம்பீர்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதியுமான கெளதம் கம்பீர் தனது MP LAD (Local Area Development) நிதியில் இருந்து 1 கோடி ரூபாயும், தனது ஒரு மாத சம்பளத்தையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
மற்ற வீரர்
அஜின்க்யா ரகானே 10 லட்சம் ரூபாய், ரிச்சா கோஷ் 1 லட்சம் ரூபாயும், லட்சுமி ரத்தன் சுக்லா 3 மாத சம்பளமும், இர்பான் பதான் மர்றும் யூசப் பதான் 4000 முகமுடிகளை உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குக் கொடுத்துள்ளனர்.
இதேபோல் BCCI (51 கோடி ரூபாய்) மற்றும் இந்தியாவில் இருக்கும் பல்வேறு கிரிக்கெட் வாரியம் சேர்ந்து சுமார் 53.22 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications