ரிலையன்ஸ்-ஆல் புதிய பிரச்சனை.. டிஸ்ட்ரிபியூட்டர்கள் புலம்பல்.. முகேஷ் அம்பானி இலக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் அனைத்து வர்த்தகத் துறையிலும் பெரிய அளவிலான வர்த்தக மாற்றங்கள் உருவாகியுள்ளது.

 

இதில் முக்கியமான நுகர்வோர் சந்தையில் தற்போது ரீடைல் விற்பனை கடைகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் வாயிலாகவே பெறும் காரணத்தால் விற்பனையாளர்களின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் அதிகளவிலான பாதிப்பை விற்பனையாளர்கள் அதாவது சேல்ஸ்மேன் பெரிய அளவிலான வர்த்தக இழப்பை எதிர்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

work from home: மத்திய அரசின் புதிய முடிவு.. ஊழியர்களுக்கு ஏகப்பட்ட நன்மை..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவில் ரீடைல் வர்த்தகச் சந்தையைப் பிடிக்கப் பெரு நிறுவனங்கள் அதிகமாக களத்தில் இறங்கியுள்ளது. இதில் சமீபத்தில் நுழைந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நேரடியாக உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து தள்ளுபடி விலைக்கு வாங்கி விற்பனை கடைகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.

வர்த்தகம் பாதிப்பு

வர்த்தகம் பாதிப்பு

இதன் மூலம் உற்பத்தி நிறுவனங்களுக்கும், ரீடைல் விற்பனை கடைகளுக்கும் அதிகப்படியான லாபம் கிடைத்தாலும், நடுவில் இருக்கும் விற்பனையாளர்களின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்பது தான் இப்போது பெரும் பிரச்சனையாக விளங்குகிறது.

டிஸ்ட்ரிபியூட்டர்

டிஸ்ட்ரிபியூட்டர்

அதாவது மளிகை கடைகள் மற்றும் சிறு கடைகளின் விற்பனைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் பெறப்படுவதால் விற்பனையாளர்கள் அல்லது டிஸ்ட்ரிபியூட்டர்களின் விற்பனை 20-25 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

முகேஷ் அம்பானி
 

முகேஷ் அம்பானி

மேலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் கூட்டணி வைக்கும் ரீடைல் விற்பனை கடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஜியோமார்ட் பார்ட்னர் ஆப் மூலம் டிஜிட்டல் மூலம் ஆர்டர் செய்தால் ரீடைல் விற்பனை கடைகளுக்கு அதிகப்படியான தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது.

45,000

45,000

ரீடைல் சந்தையில் ரிலையன்ஸ் மூலம் தற்போது 45,000க்கும் அதிகமான டிஸ்ட்ரிபியூட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனையாளர்கள் பல வருடங்களாக உற்பத்தி நிறுவனங்களுக்கும் விற்பனை கடைகளுக்கும் பாலமாக இருந்துள்ளனர்.

டிஸ்ட்ரிபியூட்டர் அமைப்பு

டிஸ்ட்ரிபியூட்டர் அமைப்பு

இந்நிலையில் All India Consumer Products Distributors Federation அமைப்பு அனைத்து நுகர்வோர் நிறுவனங்களுக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கும் அதே சலுகை விலையில் தங்களுக்கும் பொருட்களைக் கொடுக்க வேண்டும் எனக் கடிதம் அனுப்பியுள்ளது.

விநியோகம் நிறுத்தம்

விநியோகம் நிறுத்தம்

இந்த விலை குறைப்புக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், ரீடைல் கடைகளுக்குப் பொருட்களை டெலிவரி செய்வதையும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பொருட்களையும் சப்ளை செய்வதை நிறுத்திவிடுவோம் எனவும் 4,00,000 அதிகமாக உறுப்பினர்கள் கொண்ட All India Consumer Products Distributors Federation அமைப்பு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் நிறுவனங்கள்

நுகர்வோர் நிறுவனங்கள்

இவ்வமைப்பு ரிக்கெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோல்கேட் மற்றும் 20க்கும் அதிகமாக நுகர்வோர் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் எந்த ஒரு நிறுவனமும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்திய ரீடைல் சந்தை

இந்திய ரீடைல் சந்தை

இந்தியாவின் ரீடைல் சந்தையில் மளிகை கடைகள் அல்லது சிறிய கடைகள் தான் 80 சதவீத வர்த்தகத்தை உருவாக்குகிறது. கிட்டதட்ட 900 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை உருவாக்கி வருகிறது. இந்திய ரீடைல் சந்தையில் ஈகாமர்ஸ் வர்த்தகத்தை விடவும் கடைகள் மூலம் செய்யப்படும் வர்த்தகம் தான் அதிகம்.

ரிலையன்ஸ் இலக்கு

ரிலையன்ஸ் இலக்கு

இந்த நிலையில் சுமார் 3,00,000 கடைகள் 150 நகரங்களில் இருந்து ரிலையன்ஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் 1 கோடி கடைகள் உடன் இணைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது ரிலையன்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Distributors may stop supply to Kiranas, protest against Reliance Industries

Indian Distributors may stop supply to Kiranas, protest against Reliance Industries ரிலையன்ஸ்-ஆல் புதிய பிரச்சனை.. டிஸ்ட்ரிபியூட்டர்கள் புலம்பல்.. முகேஷ் அம்பானி இலக்கு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X