1991 நெருக்கடிக்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சியை நோக்கி இந்தியா! உலக வங்கி கணிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1991- 92 கால கட்டங்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் அந்நிய செலாவணி அடுத்த சில வாரங்களுக்கு மட்டுமே கையிருப்பு இருந்த ஒரு இருண்ட காலம்.

இந்தியாவுக்கான கடன் ரேட்டிங்குகள் எல்லாம் சரமாரியாக சரிந்த உடன், உலக வங்கி முதல் குட்டி நாடுகள் வரை யாரும் இந்தியாவுக்கு கடன் கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை.

வேறு வழி இல்லாமல், தங்கத்தை அடமானம் வைத்து உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் கடன் வாங்கியது இந்திய அரசு.

எல் பி ஜி

எல் பி ஜி

அந்த கடுமையான பொருளாதார பிரச்சனைகளுக்குப் பிறகு தான், இந்தியாவில் 1991 - 96 காலத்தில் மன்மோகன் சிங் தலைமையில் உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. இன்று கொரோனா வைரஸ் அப்படி ஒரு இக்கட்டான சூழலைத் தான் உலகம் முழுக்க உருவாக்கி இருக்கிறது.

1991 - 92

1991 - 92

பிரதமர் ராஜிவ் காந்தி மரணம், அதைத் தொடர்ந்து நரசிம்மா ராவ் புதிய பிரதமராக வந்த காலத்தில், இந்திய பொருளாதாரம் 1.1 சதவிகிதம் தான் வளர்ச்சி கண்டதாகச் சொல்கிறது உலக வங்கி தரவுகள். இப்போது இந்த 2020 - 21 நிதி ஆண்டில் 1.5 சதவிகிதம் வரை இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி காணலாம் என்கிறார்கள். காரணம் கொரோனா வைரஸுக்காக அறிவித்த லாக் டவுன்.

கணிப்பு

கணிப்பு

இந்தியாவில் மேற்கொண்டு இந்த லாக் டவுன் நடவடிக்கைகள் எல்லாம் நீட்டிக்கப்படாது என்றால், 2020 - 21 நிதி ஆண்டில் சுமாராக 2.8% வரை இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி காணலாம் என்கிறது உலக வங்கி. ஒருவேளை லாக் டவுனை நீட்டித்தால் இந்த 2020 - 21-ல் 1.5% வரை ஜிடிபி வளர்ச்சி காணலாம் என்கிறது உல வங்கி.

முந்தைய கணிப்பு

முந்தைய கணிப்பு

இதற்கு முன் இந்த 2020 - 21 நிதி ஆண்டில், இந்திய பொருளாதாரத்தில் ஜிடிபி சுமாராக 6.1 சதவிகிதம் வரை வளரலாம் எனக் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று, முன்பு கணித்த 6.1 சதவிகித வளர்ச்சியில், 25 சதவிகிதம் வரை மட்டுமே வளர்ச்சி காணலாம் என அதே உலக வங்கி சொன்னால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

1991-க்குப் பிறகு

1991-க்குப் பிறகு

உலக வங்கியின் தரவுகள் படி, கடந்த 1991-க்குப் பிறகு, இந்தியப் பொருளாதாரம் ஒரு முறை கூட 3 %-க்குக் கீழ் வளர்ச்சி குறைந்ததே இல்லை. ஆனால் இந்த கொரோனா வைரஸ் லாக் டவுனால் இந்தியப் பொருளாதாரம், சுமாராக கடந்த 3 தசாப்தங்களில் (30 ஆண்டுகளில்) காணாத வீழ்ச்சியைக் காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது உலக வங்கி.

மற்றவர்கள் கணிப்பு

மற்றவர்கள் கணிப்பு

நொமுரா நிறுவனம் 2020-ம் ஆண்டில் இந்திய ஜிடிபி 0.5 % சரியலாம் எனச் சொல்லி இருக்கிறது. ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இந்த 2020 - 21-க்கு 2 % ஜிடிபி வளர்ச்சி காணலாம் எனக் கணித்து இருக்கிறது. கோல்ட் மேன் சாக்ஸ் 1.6 % இந்திய ஜிடிபி வளரலாம் எனக் கணித்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Economy may face a historical fall after 1991 crisis world bank

The corona virus had thrashed all the global super powers and economies. The Indian Economy may face a historical GDP fall after 1991 crisis world bank predicts.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X