2025 முன் இந்தியா பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை: ஐஎம்எப் தலைவர் கீதா கோபிநாத்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் மீட்டு எடுக்க மோடி தலைமையிலான மத்திய அரசு, மிகப்பெரிய பட்ஜெட் தொகையில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் அடங்கிய பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்துத் தயாராக வைத்துள்ள நிலையில், வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2020ல் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், தொழிற்துறைக்கும் அதிகளவிலான சலுகைகள் இருக்கும் என நம்பப்படும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கீதா கோபிநாத்

கீதா கோபிநாத்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகில் பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணித்து வரும் IMF எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான கீதா கோபிநாத் இந்தியப் பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சி அளவீடுகள் குறித்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

2019ஆம் ஆண்டில், அதாவது கொரோனாவுக்கு முந்தை காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் 6-7 சதவீத வளர்ச்சியில் இருந்தது. இந்த அளவீட்டை எப்போது இந்தியா அடையும் எனக் கேட்டதற்கு, கீதா கோபிநாத் இந்திய பொருளாதாரம் தனது பழைய நிலையை 2025க்கு முன் அடையக் கண்டிப்பாக வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகள் இந்த நிலையில் தான் உள்ளது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

வராக் கடன் வங்கி

வராக் கடன் வங்கி

2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனையான வராக்கடனைத் தீர்க்க மத்திய அரசு Bad Bank என்ற வங்கி அமைப்பு உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம்குறித்துக் கீதா கோபிநாத் கூறுகையில், Bad Bank என்பது ஒரு சிறந்த யோசனை தான், ஆனால் அரசு பொதுத்துறை வங்கியை மேம்படுத்த வேண்டும் என்றால் insolvency மற்றும் bankruptcy வடிவமைப்பை இந்திய சந்தைக்கு ஏற்பட்ட மறுசீரமைப்புச் செய்து மேம்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் அறிக்கை

பட்ஜெட் அறிக்கை

மேலும் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் 2 விஷயங்களை மிகவும் முக்கியமாகச் செய்ய வேண்டும். ஒன்று தற்போது பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதிப்புகளைச் சீர்திருத்தும் இதேவேளையில் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

ஏழை குடும்பங்கள்

ஏழை குடும்பங்கள்

இதன் இந்தியாவில் இருக்கும் பல கோடி ஏழைக் குடும்பங்களுக்குக் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மேம்பட உதவ வேண்டும். மறுபுறம் நாட்டின் சுகாதாரம், உள்கட்டமைப்பு, நிதி உட்செலுத்துதல், உற்பத்தியே மேம்படுத்த அதிகளவிலான நிதியை ஒதுக்க வேண்டும்.

MSME நிறுவனங்களுக்குச் சலுகை

MSME நிறுவனங்களுக்குச் சலுகை

குறிப்பாக இந்தியாவில் இருக்கும் MSME நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் அதிகச் சலுகைகள் அளிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்வியல் மேம்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian economy may not hit pre-Covid levels before 2025: IMF Chief Gita Gopinath

Indian economy may not hit pre-Covid levels before 2025: IMF Chief Gita Gopinath
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X