சூடு பிடிக்கும் இந்திய EPharmacy! மெர்ஜர், அக்வசிஷன், புது வரவு என அனல் பறக்கும் வியாபாரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வியாபாரத்தில், லாபம் வருவதாகவும், எதிர்காலத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாகவும் இருந்தால் தானே, பலரும் அந்த வியாபாரத்தைச் செய்வார்கள்?

அப்படி, இன்று பல தரப்பினர்களின் கவனத்தை சுண்டி இழுத்துக் கொண்டு இருக்கிறது, இந்தியாவின் இ-பார்மஸி (EPharmacy) துறை.

அமெரிக்காவின் மிகப் பெரிய கம்பெனி தொடங்கி, இந்தியாவின் ரிலையன்ஸ் வரை பலரும் இந்திய இ-பார்மஸி (EPharmacy) துறை அப்பத்தை சாப்பிட, போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய இ-பார்மஸி (EPharmacy) துறையில் நடந்து கொண்டிருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

வழக்கம் போல வியாபாரம்

வழக்கம் போல வியாபாரம்

இந்திய இ பார்மஸி துறையில்,
நெட் மெட்ஸ்,
பார்ம் ஈஸி,
1 எம் ஜி,
மைரா மெட்,
மெட் லைஃப்... என பல கம்பெனிகள் தங்கள் வியாபாரத்தைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். வியாபாரத்துக்கான தேவையும், வியாபாரத்தில் லாபமும் இருப்பதால், பண பலம் கொண்ட கம்பெனிகளும், இந்த இ பார்மஸி துறையில் வலது காலை எடுத்து வைத்து வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

அமேசான் வருகை

அமேசான் வருகை

கடந்த வாரத்தில் தான், உலகின் மிகப் பெரிய இ காமர்ஸ் கம்பெனிகளில் ஒன்றான அமேசான், இந்திய இ-பார்மஸி (EPharmacy) துறையில் நுழைந்தது. இந்தியாவில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை, க்ளவுட் டெயில் (Cloudtail) என்கிற கம்பெனி வழியாக டெலிவரி செய்ய அமேசான் பார்மஸி என்கிற பெயரில் களம் இறங்கியது.

ரிலையன்ஸ் அக்வசிஷன்

ரிலையன்ஸ் அக்வசிஷன்

ஆயிரக் கணக்கான மைலுக்கு அந்த பக்கம் இருக்கும் கம்பெனிகளே, இந்திய ரீடெயில் சந்தையில் நுழையும் போது ரிலையன்ஸ் மட்டும் என்ன லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்களா? நெட்மெட்ஸ் (Netmeds) கம்பெனியின் தாய் நிறுவனமான விடலிக் (Vitalic) என்கிற கம்பெனியின் 60 % பங்குகளை சுமாராக 620 கோடி ரூபாய் கொடுத்து ரிலையன்ஸ் ரீடெயில் வாங்கி இருக்கிறதாம். இந்த செய்தியை நேற்று, ரிலையன்ஸ் கம்பெனி தரப்பில் உறுதி செய்து இருக்கிறார்கள்.

துணை நிறுவனங்கள்

துணை நிறுவனங்கள்

இந்த டீல் வழியாக நெட் மெட்ஸ் என்கிற கம்பெனி உடன், அதன் துணை நிறுவனங்களான Tresara Health, Netmeds Market Place and Dadha Pharma Distribution போன்ற கம்பெனிகளையும் 100 % பெற இருக்கிறார்களாம். ஆக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மிக அழுத்தமாக இந்தியாவின் இ-பார்மஸி (EPharmacy) களத்தில் குதித்துவிட்டது.

 மெர்ஜர் டீலுக்கு ஓகே

மெர்ஜர் டீலுக்கு ஓகே

இப்படி பெரிய கம்பெனிகள் எல்லாம், இந்திய இ-பார்மஸி (EPharmacy) களத்தில் குதித்துக் கொண்டிருக்கும் போது, PharmEasy என்கிற கம்பெனி, தன்னை விட சிறிய போட்டி நிறுவனமான Medlife உடன் மெர்ஜ் செய்து கொள்ள, ஒப்புதல் கொடுத்து இருக்கிறதாம். இந்திய இ பார்மஸி துறையில் இதை ஒரு பெரிய விஷயமாகப் பார்க்கிறார்கள். ஏன்? 

உதாரணம் உணவு டெலிவரி

உதாரணம் உணவு டெலிவரி

இந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் தான், உபர் நிறுவனத்தின் உணவு டெலிவரி வியாபாரத்தை சொமேட்டோ நிறுவனம் வாங்கியது. இப்படி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், தன் சக நிறுவனத்தையே விலை கொடுத்து வாங்குகிறது என்றால், அங்கு இன்னும் பெரிய வியாபார வாய்ப்புகள் இருப்பதாகத் தானே பொருள்? அதே தான் இந்திய இ பார்மஸியில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

இ பார்மஸிக்கு வரைமுறைகள் & கட்டமைப்புகள்

இ பார்மஸிக்கு வரைமுறைகள் & கட்டமைப்புகள்

இன்னும் இந்தியாவில் இ பார்மஸிக்கு என்று சரியான நெறிமுறைகளோ அல்லது கட்டமைப்புகளோ இல்லையாம். அதனால் பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறதாம். இந்தியாவில் இ பார்மஸிக்கான விதிகள் இன்னும் வெளியிடப்படாதது, இ பார்மஸி கம்பெனிகளுக்கும், அந்த கம்பெனிகளில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்களுக்கும் கவலையளிப்பதாக இருக்கிறதாம். விரைவில் இ பார்மஸி சட்டத்தை எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian EPharmacy space is seeing merger acquisition and new entrants

The Indian EPharmacy sector is in a big transformation phase. EPharmacy space is seeing merger, acquisition and new entrants in the last few weeks.
Story first published: Wednesday, August 19, 2020, 15:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X