ஊழியர்களை தக்க வைக்க அதிரடி திட்டம்.. நிறுவனங்களின் பலே திட்டம்.. கைகொடுக்குமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், இன்று வரையும் திறன் உள்ள ஊழியர்களுக்கு பற்றாக்குறையே நிலவி வருகின்றது.

குறிப்பாக பல நிறுவனங்களிலும் அட்ரிஷன் விகிதம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்..! கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்..!

இது நிறுவனங்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளதோடு, செலவுகளையும் அதிகரித்துள்ளது.

பல சவால்கள்

பல சவால்கள்

தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிறுவனங்கள், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக மூத்த ஊழியர்களையும், திறன் மிக்க ஊழியர்களையும் தக்கவைத்துக்கொள்ள, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்காவது தக்க வைத்துக் கொள்ள பல திட்டங்களை புதியதாக வகுத்து வருகின்றன.

ஒத்தி வைக்கப்பட்ட சலுகைகள்

ஒத்தி வைக்கப்பட்ட சலுகைகள்

அந்த வகையில் தற்போது குறைந்தபட்சம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சலுகைகளை (deferred incentives) அறிவிக்கின்றன.

இது கேஸ் போனஸ், ஒத்திவைக்கப்பட்ட போனஸ் (deferred incentives), பங்குகள், தக்க வைப்பு போனஸ் (annual retention bonus) உள்ளிட்ட பல சலுகைகளையும் கொடுத்து வருகின்றன. இது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒத்தி வைப்பு போனஸ் விகிதம்

ஒத்தி வைப்பு போனஸ் விகிதம்

ஆக இப்படியாக நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள பலவகையான, புதிய பாலிசிகளையும் கொள்கைகளையும் உருவாக்கி வருகின்றனர். இதில் தக்க வைப்பு போனஸ் ஆப்ஷனில் ஆரம்பத்தில் 8 - 10% ஆக முன் பணம் செலுத்தப்பட்டும் வருகின்றது.

இதே ஒத்தி வைப்பு போனஸ் விகிதம் என்பது முதல் ஆண்டில் 8%மும், இரண்டாவது ஆண்டில் 8%-ம், மீத தொகை மூன்றாவது ஆண்டில் போனஸ் தொகையும் வழங்கப்படும் என ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. இதன் மூலம் ஊழியர்கள் தொடர்ந்து கணிசமான ஆண்டுகளுகு நிறுவனங்களை விட்டு வெளியேறாமல் இருப்பார்கள் என்பது நிறுவனங்களின் நம்பிக்கை.

நீண்டகால ஊக்கத்தொகை

நீண்டகால ஊக்கத்தொகை

ஒத்தி வைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் என்பது ஒரு வகை நீண்டகால ஊக்கத்தொகை (LTI) திட்டமாகும். இதன் மூலம் சம்பளத்தில் கணிசமான தொகையை 1 - 2 - 3 ஆண்டுகளில் ஊக்கத் தொகையாக அளிக்கின்றது. பல நிறுவனங்கள் போனஸ் மற்றும் பணியாளர் பங்கு உரிமை திட்டங்கள் (Employee Stock Ownership Plan), பணியாளர் பங்கு கொள்முதல் திட்டம் (Employee Stock Purchase Plan) போன்ற நீண்டகால ஊக்கத்தொகை திட்டங்களையும் வழங்கி வருகின்றன.

பணியாளர் பங்கு உரிமை திட்டங்கள்

பணியாளர் பங்கு உரிமை திட்டங்கள்

இதில் பணியாளர் பங்கு உரிமை திட்டங்கள் பல நிறுவனங்களில் ஏற்கனவே உள்ளன. எனினும் இது மேலாண்மை அல்லது தலைமை குழுவிற்கு மட்டுமே உள்ளது. ஆக இந்த ஊக்குவிப்பு என்பது குறைவாகத் தான் உள்ளது. இதில் ESPPக்கள் இந்தியாவில் செயல்படும் MNCகளில் சுமார் 25 - 30% ஆப்ஷனாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian firms turn to bonuses to retain top talents as attrition rate surges

Indian firms turn to bonuses to retain top talents as attrition rate surges/ ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்களின் பலே திட்டம்.. கைகொடுக்குமா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X