ரூ.2,000 கோடி கடன் வாங்கும் இந்தியா.. எதற்காக...?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிலிப்பைன்ஸின் மணிலாவை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது தான் ஆசிய வளர்ச்சி வங்கி, நகர்புறங்களில் ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

 

இந்த திட்டத்தின் மூலம் 13 மாநிலங்களில் 256 மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். இதில் குடிசை பகுதிகளைச் சேர்ந்த 51 மில்லியன் மக்கள் உள்ளனர்.

இது குறித்தான விரிவான ஒப்பந்தத்தில், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ரா இந்திய அரசின் சார்பில் கையெழுத்திட்டுள்ளார்.

கெட்டுப்போன டாடா கையில் 3 விமான நிறுவனங்கள்.. சுப்பிரமணியன் சாமி டிவீட்..!

எதற்காக கடன் ஒப்பந்தம்

எதற்காக கடன் ஒப்பந்தம்

இதே ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய பிரிவு இயக்குனர் டேக்கோ கோஜிஷி வங்கியின் சார்பிலும் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் நகர்புறங்களில் தொற்று நோய்க்கான தயார் நிலையை வலுப்படுத்துவதற்கான உள்ளக்கட்டமைப்பை வசதிகளை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன திட்டங்கள்

என்னென்ன திட்டங்கள்

இந்த திட்டத்தின் மூலம் இந்திய அரசின் முக்கிய சுகாதர திட்டங்களான ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் மற்றும் வெல்நெஸ் மையங்கள் (AB - HWC) மற்றும் பிரதான் மந்திரி ஆத்ம நிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா (PM - ASBY), இந்த திட்டம் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன் (PM - ABHIM) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்களை மேம்படுத்த உதவும் என மிஸ்ரா கூறியுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு மேம்படுத்தல்
 

சுகாதார பாதுகாப்பு மேம்படுத்தல்

2018ல் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவில், உலகளாவிய சுகாதார பாதுகாப்பினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.

நாட்டில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் தான் இந்திய அரசு சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த கடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பல சவால்கள்

பல சவால்கள்

இந்தியாவில் கொரோனாவின் மத்தியில் சுகாதார கட்டமைப்பு துறையில் பல சவால்கள் நிலவி வந்தது. இதனை போன்று வேறு பிரச்சனைகள் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால், அதனை சமாளிப்பது மிகவும் முக்கியமானது. ஆக பாதுகாப்பினை உறுதி செய்வது மிக முக்கியமானது என்றும் கோனிஷி கூறியுள்ளார்.

13 மாநிலங்களில் மேம்படுத்தல்

13 மாநிலங்களில் மேம்படுத்தல்

ஆந்திர பிரதேசம், அசாம், சத்தீஷ்கர், குஜராத், ஹரியானாம் கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள நகர்புறங்களில் இந்த திட்டம் மூலம் விரிவாக்கம் செய்யப்படும். குறிப்பாக தொற்று நோய் அல்லாத சேவைகள், சமூக நலன் சார்ந்த சேவைகள், குறிப்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றினையும் மேம்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: adb ஏடிபி
English summary

Indian govt and ADB have signed a Rs.2,000 crore above loan pact to boost primary health care sector

Indian govt and ADB have signed a Rs.2,000 crore above loan pact to boost primary health care sector/ ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ரூ.2,000 கோடிக்கு மேல் கடன் வாங்கும் இந்தியா.. எதற்காக...?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X