இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது பொற்காலம் தான்.. ஊழியர்களுக்கும் ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் பல துறைகள் முடங்கி பல் தொழிலாளார்கள் வேலையிழந்து தவித்து வந்த நிலையில், ஐடி துறையில் மட்டும் எதிர்மாறாக, புதிய பணியமர்த்தல், சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு என புத்துணர்ச்சியுடன் இயங்கி வந்தது.

சொல்லப்போனால் கொரோனாவுக்கு முன்பை விட, நன்றாகவே செயல்பட ஆரம்பித்துள்ளன எனலாம்.

கடந்த சில காலாண்டுகளாக ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்றன.

தனலட்சுமி வங்கிக்கு ரூ.27.5 லட்சம் அபராதம்.. ரிசர்வ் வங்கி உத்தரவு..! தனலட்சுமி வங்கிக்கு ரூ.27.5 லட்சம் அபராதம்.. ரிசர்வ் வங்கி உத்தரவு..!

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்


இந்த வளர்ச்சி விகிதமானது இன்னும் சில காலாண்டுகளுக்கு தொடரலாம். இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் எம்கே ரிசர்ச் நிறுவனம், ஐடி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளன. இந்த வளர்ச்சி விகிதமானது அடுத்து வரும் காலாண்டுகளிலும் தொடரலாம் என கணித்துள்ளது.

அதிகரித்து வரும் தேவை

அதிகரித்து வரும் தேவை

ஐடி துறையினரின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வளர்ச்சி விகிதமானது நிலையானதாக இருக்கும். குறிப்பாக ஐடி துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ், டிஜிட்டல் மாற்றங்கள், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றின் தேவையானது மிக அதிகரித்து வருகின்றது.

வளர்ச்சி விகிதம்

வளர்ச்சி விகிதம்

டயர் 1ல் இருக்கும் ஐடி நிறுவனங்கள் முதல் காலாண்டில் 0.9% - 12.2% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன. ஆக இந்த முதல் காலாண்டில் காணும் வளர்ச்சி விகிதமானது, நடப்பு நிதியாண்டு முழுவதும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறைகளில் நல்ல வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஃபோசிஸ் கணிப்பு

இன்ஃபோசிஸ் கணிப்பு

நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நடப்பு நிதியாண்டில் அதன் வளர்ச்சி விகிதத்தினை முன்பாக 12 - 14% ஆக இருந்த நிலையில், தற்போது அந்த விகிதத்தினை 14 - 16% ஆக அதிகரித்துள்ளது.

Array

Array


இதே போல ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.

இதே விப்ரோ நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதமானது இரண்டாவது காலாண்டில் 5 - 7% வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பங்கு விலை அதிகரிக்கலாம்

பங்கு விலை அதிகரிக்கலாம்

நிறுவனங்கள் தங்களது வளர்ச்சி கணிப்பினை அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி கணிப்பாக பார்க்கப்படுகிறது. ஆக முதல் காலாண்டு வளர்ச்சி விகிதத்தினை போல, அடுத்து வரும் காலாண்டுகளிலும் அதன் வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் இந்த நிறுவன பங்குகளின் விலையானது நடப்பு ஆண்டில் வளர்ச்சி காணும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சவாலாக அமையலாம்

சவாலாக அமையலாம்

எனினும் அதிகரித்து வரும் தேவைகளுக்கு மத்தியில் நிறுவனங்கள், தேவையை தக்க வைத்துக் கொள்ள, சம்பள விகிதங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும். பணியமர்த்தலை அதிகரிக்க வேண்டும். அட்ரிசன் மிக கவலையளிக்கும் விஷயமாக உள்ள நிலையில், இது நிறுவனங்களுக்கு சவாலாக அமையலாம். இதனால் நிறுவனங்களுக்கு செலவினங்கள் அதிகரிக்கலாம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இன்றைய பங்கு விலை நிலவரம் என்ன?

இன்றைய பங்கு விலை நிலவரம் என்ன?

TCS நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 1.32% அதிகரித்து, 3,720.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

Wipro நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 0.95% அதிகரித்து, 634.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

HCL tech நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 0.39% குறைந்து, 1,162.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

Infosys நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 1.09% குறைந்து, 1,708.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

Tech Mahindra நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 0.28% குறைந்து, 1,445.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

Mphasis ltd நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 5.52% அதிகரித்து, 2,894.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

Larson & turbo InfoTech ltd நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 1.87% அதிகரித்து, 5,233.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT companies grow strongly in FY22, will add more employees

IT companies latest updates.. Indian IT companies grow strongly in FY22, will add more employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X