ஐடி ஊழியர்களுக்கு டிரம்பின் ஒற்றை செக்.. 3 லட்சம் இந்திய ஐடி ஊழியர்களின் நிலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவினை பொறுத்த வரையில் ஐடி ஊழியர்களுக்கு இத்துறையின் மீது, ஒரு தீராத காதலும் மோகமும் உண்டு எனலாம். அதிலும் அவர்களில் பலரின் கனவே அமெரிக்க நிறுவனங்களில் சென்று பணி புரிவது தான்.

ஆனால் அப்படி சென்று பணிபுரிவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் நல்ல திறமையுள்ள பணியாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் விசா தான் ஹெச் 1 பி விசாவாகும்.

ஏற்கனவே கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் மக்கள் தள்ளாடி வரும் நிலையில், பல ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் நிலவி வருகின்றது.

அமெரிக்காவில் பணியிழப்பு
 

அமெரிக்காவில் பணியிழப்பு

இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இந்திய ஐடி ஊழியர்களில் பலர் பணியிழந்து வருகின்றனர். பலருக்கு சம்பள குறைப்பு என பல அதிரடியான நடவடிக்கைகளை ஐடி நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல ஆயிரம் பேர் தங்களது அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அண்டை நாடுகளிலும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் பல ஐடி நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்துள்ளன.

பணியிழக்கும் அபாயம்

பணியிழக்கும் அபாயம்

மேலும் குறிப்பாக ஐடி நிறுவனங்களுக்கு பேர் போன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகளவிலான பாதிப்புகள் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் முடங்கி போயுள்ளது எனலாம். இதன் காரணமாக அங்குள்ள ஐடி ஊழியர்கள் பணியிழக்கும் அபாயம் நிலவி வருகின்றது.

அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு

அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு

அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அங்கு வெளி நாட்டினர்களும் வேலை இழக்கும் அபாயம் நிலவி வருகின்றது. ஆக இந்த இந்த விசா நடவடிக்கையானது, உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை விகிதத்தினை அதிகரிக்கும் என்பது டிரம்பின் வாதமாகும்.

இந்தியர்கள் எத்தனை பேர்
 

இந்தியர்கள் எத்தனை பேர்

இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவது இந்திய ஊழியர்கள் தான். ஏனெனில் அங்கு சுமார் 3 லட்சம் இந்திய ஊழியர்கள் ஹெச் 1 பி விசா மூலம் பணியாற்றி வருகின்றனர். மேலும் புதிய விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை இன்னும் சில தினங்களில் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு புதிய விசாக்களையும் தற்காலிகமாக தடை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பணியமர்த்தல் இல்லை

புதிய பணியமர்த்தல் இல்லை

அவ்வாறு தடை செய்தால், புதியதாக இனி விசா கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிடும். அதோடு ஏற்கனவே அங்கிருக்கும் ஐடி ஊழியர்களும் நாடு திரும்ப நேரிடலாம். இதன் காரணமாக பல ஆயிரம் பேர் மேலும் பணியிழக்க நேரிடும். அதோடு புதிய பணியமர்த்தலும் குறைந்து வருகிறது. இதே இந்தியாவினை பொறுத்தவரையில் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் தற்போதைக்கு பணியமர்த்தல் இல்லை என்று கூறி வருகின்றன.

ஐடி ஊழியர்களுக்கு இது மோசமான காலமே

ஐடி ஊழியர்களுக்கு இது மோசமான காலமே

இதற்கு மத்தியில் ஐடி தேவையும் சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி துறையானது அடுத்த நிதியாண்டின் பிற்பாதியில் தான் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஒர் அறிக்கை கூறியது. ஆக மொத்தத்தில் ஐடி ஊழியர்களுக்கு இது மோசமான காலமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT employees may affect on coming new restrictions of H 1B visa

US president Donald trump said he will announce new restrictions on employees based immigration visas. It may affect Indian IT employees.
Story first published: Sunday, June 21, 2020, 12:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X