இந்திய டெக், ஐடி ஊழியர்கள் சோகம்.. இனி 'இது' நடக்காதா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் இருக்கும் பெரிய டெக் நிறுவனங்களில் பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான டெக் ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ஆரம்பம் முதல் பணிநீக்கம் இருந்து வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டிலும் இது தொடர்கிறது.

இதற்கிடையில் அதிகச் சம்பளத்தில் இருந்தும், உயர் பதவிகளில் இருந்தும் பணியை இழந்தவர்களில் பெரும்பாலானோர் புதிய வேலைகளைப் பெறுவது கடினமாக உள்ளது.

ஏனெனில் உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகப் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதோடு பல நிறுவனத்தில் hiring நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளனர்.

கர்நாடகா-வின் தலையெழுத்தை மாற்றிய எஸ்.எம்.கிருஷ்ணா.. ஐடி முதல் பயோடெக் வரை..! கர்நாடகா-வின் தலையெழுத்தை மாற்றிய எஸ்.எம்.கிருஷ்ணா.. ஐடி முதல் பயோடெக் வரை..!

 பணிநீக்கம், பணி அமர்தல்

பணிநீக்கம், பணி அமர்தல்


உதாரணமாக அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், மெட்டா, ட்விட்டர், உபர் மற்றும் பிற டாப் டெக் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததோடு, hiring நடவடிக்கையை முடக்கிவிட்டனர்.

இந்த நிலையில் தான் இந்தியர்களின் அமெரிக்கக் கனவு வெறும் கனவாகவே இருந்துவிடுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலீட்டுச் சந்தை

முதலீட்டுச் சந்தை

உலகளவில் முதலீட்டுச் சந்தையில் உருவாகியுள்ள மந்தநிலை, மற்றும் உலகளாவிய மேக்ரோ - பொருளாதாரப் பிரச்சனைகள் மத்தியில் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களில் பல புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்று இருந்தாலும், இதே சம்பளம், அதே தகுதி உடைய நிறுவனங்கள், உயர் பதவிகளில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா..?

டெக் ஊழியர்கள்

டெக் ஊழியர்கள்

சந்தை ஆய்வுகள் படி அமெரிக்காவில் முன்னணி டெக் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான டெக் ஊழியர்கள் புதிய வேலைவாய்ப்புகளைத் தேட துவங்கிய மூன்று மாதங்களுக்குள் புதிய வேலைகளில் சேர்ந்துள்ளனர்.

3 மாதம்

3 மாதம்

ZipRecruiter என்னும் நிறுவனத்தின் ஆய்வுகள் படி டெக் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் கிட்டத்தட்ட 79 சதவீதம் பேர் மூன்று மாதங்களுக்குள் புதிய வேலையில் சேர்ந்துள்ளனர். இதோடு பணிநீக்கம் செய்யப்பட்ட 10ல் 4 டெக் ஊழியர்கள் புதிய வேலையைத் தேடத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் வேலை கிடைத்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

பணிநீக்கம் 2023

பணிநீக்கம் 2023

இந்தப் பணிநீக்கம் மற்றும் hiring நடவடிக்கையை முடக்கிவிட்ட காரணத்தால் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களே தடுமாறி வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ரெசிஷனுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அமேசான், vimeo போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

60 நாள் கெடு

60 நாள் கெடு

மேலும் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை இழந்த வெளிநாட்டினர் அதாவது ஹெச்1பி விசா ஊழியர்கள் அனைவரும் 60 நாட்களுக்குள் புதிய வேலைவாய்ப்புகளில் சேர வேண்டும் என்பதால் மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடுவதில் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். இல்லையெனில் 61வது நாள் சொந்த நாட்டுக்கு செல்ல அரசு ஆணை வரும்.

ஜோ பைடன் அரசு

ஜோ பைடன் அரசு

இதற்கிடையில் அமெரிக்காவில் ஜோ பைடன் அரசு உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் மக்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதை நெறிப்படுத்தவும், முறைப்படுத்தவும் பல விசா மற்றும் விசா விண்ணப்பங்கள் மீதான கட்டணத்தை அதிகரித்துள்ளது.

விசா கட்டணம்

விசா கட்டணம்

உதாரணமாக H-1B E-registration fee தற்போது வெறும் 10 டாலர், இதை 2050 சதவீதம் அதிகரித்து 215 டாலராக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் EB-5 investor Petition விண்ணப்பம் தற்போது 3,675 டாலர் மட்டுமே, இதை 204 சதவீதம் உயர்த்தி 11,160 டாலர் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளது.

விசா செலவுகள்

விசா செலவுகள்

அமெரிக்கா வரும் வெளிநாட்டு ஊழியர்களின் விசா செலவுகளை அனைத்தும் அமெரிக்க நிறுவனம் தான் ஏற்க வேண்டும் என்பதால் இந்தக் கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கு 60 நாள் மக்கள் கருத்து கேட்ட பின்பு அமலாக்கம் செய்யப்படும்.

அமெரிக்கக் கனவு

அமெரிக்கக் கனவு

இப்படிப் பணிநீக்கம், hiring நடவடிக்கையை முடக்கம், போதுமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இருப்பது, விசா கட்டணம் உயர்வு ஆகியவை 2023ல் இந்திய டெக் ஊழியர்களின் அமெரிக்கக் கனவில் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

ஐடி ஊழியர்களைப் பொட்டியை கட்ட தயாரா இருங்க..! ஐடி ஊழியர்களைப் பொட்டியை கட்ட தயாரா இருங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian IT, Tech employees saddened over American dream; Amid Visa fee, layoff increases in 2023

Indian IT, Tech employees saddened over American dream; Amid Visa fee, layoff increases in 2023
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X