கொரோனா பீதி.. லாக்டவுனால் குறைந்து போன கேஸ் தேவை.. உற்பத்தியாளர்களுக்கு கட்டாய மஜூர் நோட்டீஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகமெங்கிலும் மக்கள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தனிமைப்படுத்தல் என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகின்றது.

இதனால் உலககெங்கிலும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும், ஏன் ஒவ்வொரு மாவட்டமும், சில இடங்களில் ஒவ்வொரு வீதிகளும் கூட கடுமையாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ளன.

அதிலும் இந்தியாவில் கட்டாயம் 21 நாட்கள் லாக்டவுனை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதாரத்தினை முடக்கம்

பொருளாதாரத்தினை முடக்கம்

இவ்வாறு சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் அல்லது லாக்டவுன் உலகப் பொருளாதாரத்தினையே முடக்கியுள்ளது. இது மக்களின் நுகர்வினையே முடக்கியுள்ளது. இதனால் பல பொருட்களுக்கான தேவையும் குறைந்து வருகிறது. இதனால் அத்துறை சார்ந்த உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே கூறலாம்.

 தனிமைப்படுத்தல் அவசியம்

தனிமைப்படுத்தல் அவசியம்

எனினும் மிக எளிதாக பரவும் இந்த கொடிய வைரஸினை கட்டுப்படுத்த ஒரே வழி, இது கட்டுப்பாடில்லாமல் பரவுவதைத் தடுப்பது தான் என்றும் பல நிபுணர்களும் கூறி வருகின்றனர். ஆக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மிக அவசியமான ஒன்று தான். இதனால் பொருளாதார பேரழிவு இருந்தாலும், சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பதற்கு ஏற்ப, மக்கள் உயிருடன் இருந்தால் தானே நாடு என்பது இருக்கும்.

கட்டாய மஜூர் நோட்டீஸ்
 

கட்டாய மஜூர் நோட்டீஸ்

இந்த நிலையில் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளதால், உள்நாட்டு எரிவாயு தேவை மற்றும் துறைமுக நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் தேவை குறைந்துள்ளதால் இந்தியாவில் LNG இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு கட்டாய மஜூர் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக அத்துறை சார்ந்த வட்டாரத்தில் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலை வீழ்ச்சியடையலாம்

எரிபொருள் விலை வீழ்ச்சியடையலாம்

ஆசியாவின் மிகப்பெரிய மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் எரிபொருளின் சிறந்த இறக்குமதியாளர்களில் ஒருவரான இந்தியா, தற்போது இறக்குமதியை குறைத்துள்ளதால், இது எரிபொருள் விலையில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கனவே சீனாவில் தேவை குறைந்த நிலையில் விலை படு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில், இது மீண்டும் விலை வீழ்ச்சி காண வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முடங்க வாய்ப்பு

முடங்க வாய்ப்பு

இந்தியா தனது 1.3 பில்லியன் மக்களை புதன்கிழமையிலிருந்து 21 நாட்கள் லாக்டவுனை அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பல தொழில்களை முடங்க வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் நாட்டில் பல துறைமுகங்களும் முடங்கியுள்ள நிலையில் இது மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஏன் இந்த மஜூர் நோட்டீஸ்?

ஏன் இந்த மஜூர் நோட்டீஸ்?

ஆக அதன் தாக்கம் தற்போது எரிபொருள் சந்தையிலும் நிலவுகிறது. சமையல் கேஸ் மட்டும் அல்லாது பல தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு தேவையும் குறைந்துள்ளது. இது இன்று மட்டும் அல்ல இனியும் குறைய வாய்ப்புள்ளது. இது உரம், மின்சாரம் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பல துறைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்என்ஜி இறக்குமதியாளர்கள் கட்டாய மஜூரை வழங்கியுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இனி தான் பாதிப்பு அதிகரிக்கும்

இனி தான் பாதிப்பு அதிகரிக்கும்

ஏற்கனவே உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவை குறைந்து விட்டது. இதனால் சேமிப்பு கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதனால் வாங்குபவர்களுக்கு சரக்கினை மேற்கொண்டு வாங்க முடியவில்லை என்றும் இத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றன. இது போக்குவரத்து பிரிவில் 10% குறைந்துள்ளது. இதே சில்லறை எரிவாயு பிரிவில் 10% குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தியும் குறைந்துவிட்டது. ஆக இதன் பாதிப்பு இனி இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதிக விலையேற்றம் தடுக்கப்படலாம்

அதிக விலையேற்றம் தடுக்கப்படலாம்

கடந்த மாதத்தில் சீனாவில் தேவை குறைந்திருந்த போதிலும், ஐரோப்பா மற்றும் இந்தியாவில் தேவை அதிகம் இருந்ததால், அதிக விலையிறக்கம் தடுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஐரோப்பா மற்றும் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறியிள்ளது. சீனாவில் தற்போது தான் நிலைமை சற்றும் மெதுவாக தேறி வருகிறது. எனினும் அதிக விலையேற்றம் சற்று தடுக்கப்படலாம் என்றும் வர்த்தகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian LNG importers issue force majeure notices as gas demand slumps amid coronavirus outbreak

According to the sources, Indian LNG importers issued force majeure notices to suppliers as domestic gas demand and port operations are hit by a nationwide lockdown to curb the coronavirus pandemic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X