இன்ஃபோசிஸ்-க்கு வந்த இடியாப்ப சிக்கல்.. என்ன செய்ய போகிறது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவிக்கு ஐடி நிறுவனத்தில் பங்கு இருப்பது குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

இதனையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனம் ரஷ்யாவுடனான வணிக உறவினை குறைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?!ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?!

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டீஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். அவருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் உண்டு.

மனைவியின் பங்கு குறித்து கேள்வி

மனைவியின் பங்கு குறித்து கேள்வி

ரஷ்யா உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய பணக்காரர்கள் மீது பிரிட்டீஸ் அரசு தடைகளை விதிக்க முயன்று வருகின்றது. இதற்கிடையில் ஸ்கை நியூஸ்-ல் ரிஷி சுனக்கிடம் இன்ஃபோசிஸ் மற்றும் அவரது மனைவியின் பங்கு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

மாஸ்கோவுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தொடர்பு?

மாஸ்கோவுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தொடர்பு?

ரஷ்யாவுடன் உங்கள் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது. உங்கள் மனைவிக்கு இந்தியா நிறுவனமான இன்ஃபோசிஸில் பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மாஸ்கோவில் செயல்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு அலுவலகமும் உண்டு, அவர்கள் மாஸ்கோவின் உள்ள ஆல்பா வங்கியுடன் தொடர்பில் உள்ளனர் என்று சுனக்கிடம் கேள்வியினை தொடுத்துள்ளனர்.

நான் ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி

நான் ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி

மேலும் அந்நிறுவனம் ரஷ்யாவிலும் இயங்குகிறது. நீங்கள் பின்பற்றாத விஷயங்கள் குறித்து, மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறீர்களா? என்ற கேள்வியினால் அதிர்ச்சியடைந்த சுனக். அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி, எனவே, எனக்கு எந்த பொறுப்பு உள்ளதோ? அது குறித்தே நான் பேச வந்துள்ளேன். என் மனைவி இங்கு பேச வரவில்லை என்று கூறியுள்ளார்.

எந்த தொடர்பும் இல்லை

எந்த தொடர்பும் இல்லை

மேலும் உக்ரைனுக்கு உதவ அறிவுறுத்தப்பட்டு வரும் இந்த நேரத்தின், உங்கள் குடும்பம் புடினுடைய அரசால் இலாபம் அடைவது போல் இருக்கிறதே என்றும் ரிஷிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரிஷிக். அது அப்படி அல்ல என்று எண்ணுகிறேன். நாங்கள் குறிப்பிடத்தக்க தடைகளை விதித்துள்ளோம். எங்களின் பொறுப்பான அனைத்து நிறுவனங்களும் அதனை பின்பற்றுகின்றன என கூறியுள்ளார்.

ரஷ்யாவில் இன்ஃபோசிஸ்

ரஷ்யாவில் இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் சிறியளவிலான பணியாளர்களை கொண்ட ஒரு சிறிய பணியாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. இது உலகளாவிய வாடிக்கையாளர்களில் சிலருக்கு உள்நாட்டில் சேவை செய்து வருகின்றது. உள்நாட்டு நிறுவனங்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியது.

இந்தியா - ரஷ்யா நெருக்கமான உறவு

இந்தியா - ரஷ்யா நெருக்கமான உறவு

இந்தியாவும் ரஷ்யாவும் பனிப்போர் காலத்தில் இருந்தே நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன. இந்திய ராணுவம் இன்னும் ரஷ்ய இராணுவ உபகரணங்களை பெரிதும் சார்ந்துள்ளது. ரஷ்யாவின் போரினை கண்டிக்காமல், நடு நிலையாகவே இருந்து வரும் இந்தியா, ஐ நா சபையில் கூட வாக்களிக்கவில்லை. மேலும் தொடர்ந்து ரஷ்ய எண்ணெய்-யினை வாங்கி வருகின்றது. இந்த நிலையில் தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன கூறியிருந்தார்?

என்ன கூறியிருந்தார்?

ரிஷி சுனக் ரஷ்யாவில் முதலீடு செய்துள்ள பிரிட்டீஷ் நிறுவனங்கள் புடினுக்கு உதவலாம். ஆக ரஷ்ய முதலீடு குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும், புதிதாக யாரும் ரஷ்யாவில் முதலீடு செய்யவேண்டாம், நாம் ஒன்றிணைந்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

ரஷ்யாவுடன் வணிக உறவை குறைக்குமா?

ரஷ்யாவுடன் வணிக உறவை குறைக்குமா?

இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் அதன் இருப்பினைக் குறைக்குமா? மொத்தத்தில் இந்தியாவினை போல இன்ஃபோசிஸ் நிறுவனமும் நடு நிலை வகிக்க போகிறதா? அல்லது மருமகனுக்காக ரஷ்யாவில் உள்ள வணிகத்தினை முறித்துக் கொள்ளுமா? இன்ஃபோசிஸ்க்கு இது இடியாப்ப சிக்கல் தான், எப்படி இதில் இருந்து வெளியே வரப்போகிறதோ தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian origin Rishi sunak grilled over wife's infosys link with russia

Indian origin Rishi sunak grilled over wife's infosys link with russia/இன்ஃபோசிஸ்-க்கு வந்த இடியாப்ப சிக்கல்.. என்ன செய்ய போகிறது..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X