மீண்டும் லண்டன் நீதிமன்றத்தை நாடும் இந்திய வங்கிகள்.. விஜய் மல்லையாவின் கடனை வசூலிக்க திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் என்ற கம்பரின் வரிகளுக்கு எதிராக விஜய் மல்லையாவிற்கு கடனை கொடுத்து விட்டு, லண்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தள்ளாடி வருகின்றன இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள். இங்கு கடன் வாங்கியவர் கலங்கவில்லை. கடன் கொடுத்தவர் தான் கலங்கி வருகிறார்.

பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல், லண்டனுக்கு தப்பி சென்று அங்கு சுதந்திரமாக சுத்தி வருகிறார் விஜய் மல்லையா.

அதிலும் இந்தியாவில் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், லண்டன் அரசிடம் தஞ்சமடைந்து அங்கு வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆரக்கிள் இணைந்தார் விஷால் சிக்கா.. இனி புதுச் சகாப்தம்..!ஆரக்கிள் இணைந்தார் விஷால் சிக்கா.. இனி புதுச் சகாப்தம்..!

லண்டன் நீதிமன்றத்தை அணுகல்

லண்டன் நீதிமன்றத்தை அணுகல்

விஜய் மல்லையாவின் கடன் தொகையை திரும்ப கட்டாத நிலையில், இந்திய பொதுத்துறை வங்கிகள் மீண்டும் லண்டன் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. மேலும் விஜய் மல்லையாவிடன் இருந்து தாங்கள் கொடுத்த கடனை திரும்ப பெற லண்டன் நீதிமன்றம் உதவமாறும் அணுகியுள்ளன. எஸ்பிஐ தலைமையிலான கடன் கொடுத்தோர் குழு விஜய் மல்லையாவை எப்படியும் பிடித்தே தீர வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

திவால் நடவடிக்கை

திவால் நடவடிக்கை

சுமார் 1,145 பில்லியன் பவுண்டுகள் கடனை செலுத்தவில்லை என்று கூறப்படும் விஜய் மல்லையாவுக்கு எதிராக, திவால் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான குழு லண்டன் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதிலும் செயல்படாத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் செலுத்தப்படாத கடனை ஈடுசெய்யும் முயற்சியில், கடந்த 2018யிலேயே எஸ்பிஐ தலைமையிலான குழு லண்டன் நீதிமன்றத்தினை நாடியுள்ளது.

லண்டன் நீதிமன்றம் உதவுமா?

லண்டன் நீதிமன்றம் உதவுமா?

இதன் படி நடப்பு வாரத்தில் லண்டன் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைக்கு, நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ் தலைமை தாங்குகிறார். இதற்கு முன்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க, கடன் கொடுத்த உரிமை உண்டு என்ற இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையிலேயே இந்திய பொதுத்துறை வங்கிகளில் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கும் விதமாக நடவடிக்கையில் இறங்கின. இந்த நிலையில் இந்த வாரம் என்ன தீர்ப்பு வருமே. இங்கிலாந்து நீதிமன்றம் உதவிபுரியுமா?

சொத்துகளை முடக்க திட்டம்

சொத்துகளை முடக்க திட்டம்

இது தவிர லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவின் சொத்துகளையும் கைபற்ற வங்கிகள் நோக்கமாகக் கொண்டு, லண்டன் நீதிமன்றத்தை நாடியுள்ளன. அதிலு எஸ்பிஐ தவிர, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மைசூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, யுனைடெட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த பட்டியலில் அடங்கும்.

ஜாலியான லண்டன் வாசி

ஜாலியான லண்டன் வாசி

இது குறித்து லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் சொத்துக்களை அலசி ஆராய்ந்து வருவதோடு, எஸ்பிஐ வங்கி சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் சமர்பித்த மனுவில் விஜய் மல்லையாவைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளையும் பரிசீலித்தது. மேலும் விஜய் மல்லையா தொடர்ந்து ஆடம்பர வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார். தெருவில் வசிக்கும் மக்களைப் போல் அவர் கஷ்டபட வில்லை. இன்னும் சொல்ல போனால் அவர் எந்தவித பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வருகிறார். ஆக அவர் கடனை செலுத்தும் நிலையில் தான் இருக்கிறார் என்றும் முன்னரே கூறப்பட்டு வந்தது.

யார் இந்த விஜய் மல்லையா?

யார் இந்த விஜய் மல்லையா?

கொல்கத்தாவை சேர்ந்த இவர் முன்னாள் ராஜ்ய சபா மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் ஆவர். இவர் மதுபானம் மற்றும் விமானத் தொழில் முன்னணியில் இருந்த விஜய் மல்லையா, யுனைடெட் ப்ரூவெரீஷ் க்ரூப்ஸ் மற்றும் கிங்க்பிஷ்ஸர் விமான நிறுவனத்தின் தலைவராவர். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்களாக முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் மல்லையா விளையாட்டு துறைகளிலும் முதலீடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன தான் பிரச்சனை

அப்படி என்ன தான் பிரச்சனை

இந்திய அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளி நாட்டுக்கு வெளி நாட்டுக்கு போகலாம் என்று இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்தவர் விஜய் மல்லையாதான். சுமார் 9000 கோடி ரூபாய் கடனை வாங்கி விட்டு, திருப்பி கட்டச் சொன்னால் கட்ட முடியாமல், நான் கடன் வாங்கவில்லை, கிங்க் பிஸ்ஷர் நிறுவனம் கடன் வாங்கியது என்று கூறியவர். இதுகுறித்து கடந்த டிசம்பர் 2018ல் இங்கிலாந்தின் வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் வழக்கை தீர்ப்பை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது.

கடன் வாங்கியது உண்மை தான்

கடன் வாங்கியது உண்மை தான்

அதோடு அவர் கடன் வாங்கி கொண்டு ஓடி போனதையும் உறுதி செய்து அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் அரசிடம் இருந்து ஏதேனும் வகையில் தப்பி வந்த மல்லையா கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசிடம் ஒப்படைக்க சொல்லி இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது. எனினும் சட்டத்தில் இருக்கும் ஏதேனும் ஒட்டை வழியாக தப்பி வரும் விஜய் மல்லையாவிடம் இருந்து கடன் வசூல் செய்யப்படுமா? இந்த முறையாவது விஜய் மல்லையா பிடிபடுவரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian public sector Banks are back in London court over vijay mallaya’s debt

Indian public sector Banks are back in London court over vijay mallaya’s debt. That banks are efforts to recover dues as part of the freezing order, with the bankruptcy petition aimed at seizing UK-based Mallya’s assets to recover pending the dues.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X