வெறும் 1 ரூபாய்க்கு 10 லட்சம் இன்சூரன்ஸ்.. ரயில்வே துறையில் இப்படியொரு சேவையா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரயில் நெட்வொர்க் உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்று என அனைவருக்கும் தெரியும். நீண்ட தூர பயணத்திற்கு விமானச் சேவையைப் பயன்படுத்த முடியாத அனைவருக்கும் ரயில் மட்டுமே முக்கியச் சேவையாக உள்ளது.

இதனால் ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான பயணிகள் இந்திய ரயில்வே துறையின் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே துறை, தனது வாடிக்கையாளர்கள் அதாவது பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் முக்கியமான ஒன்று தான் காப்பீட்டு சேவை.

எல்லை தாண்டும் இந்தியன் ரயில்வே.. அண்டை நாட்டுக்கு விரைவில் ரயில்!எல்லை தாண்டும் இந்தியன் ரயில்வே.. அண்டை நாட்டுக்கு விரைவில் ரயில்!

ரயில் விபத்து

ரயில் விபத்து

ரயில் விபத்தில் ஒரு ரயில் பயணி மரணம் அடைந்துவிட்டாலோ, அல்லது ரயில் விபத்தில் காயம் ஏற்பட்டாலோ அவருக்குக் காப்பீட்டுத் தொகையையும் வழங்கப்படும். ஆனால் இதற்கு முன்கூட்டியே ரயில் பயணி காப்பீட்டை வாங்கியிருக்க வேண்டும்.

ரயில் பயணக் காப்பீடு

ரயில் பயணக் காப்பீடு

ரயில் பயணக் காப்பீட்டை மிகவும் குறைந்த விலைக்கு மத்திய அரசு வழங்குகிறது. மத்திய ரயில்வே துறை தனது பயணிகள் பாதுகாப்புக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வரை அளிக்கிறது. ரயில்வேயின் இந்த வசதி ரயில்வே டிராவல் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் வரை

ரூ.10 லட்சம் வரை

ரயில்வே பயணிகள் ஒரு ரூபாய்க்கும் குறைவான பிரீமியம் செலுத்தி ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறலாம். ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரயில்வே பயணக் காப்பீடு திட்டம் அளிக்கப்படுகிறது. இந்த வசதி ஒவ்வொரு பயணிக்கும் உள்ளது, ஆனால் இது குறித்த விழிப்புணர்வு மற்றும் தெளிவு இல்லாததால், மிகச் சிலரே ரயில்வேயின் இந்தச் சிறப்பு வசதியைப் பயன்படுத்துகின்றனர்.

 டிக்கெட்டு முன்பதிவு

டிக்கெட்டு முன்பதிவு

நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ரயில்வே பயணக் காப்பீட்டுக்கான விருப்பம் இணையதளத்தில் தோன்றும். அடுத்த முறை முன்பதிவு செய்யும் போது சந்தேகம் இல்லாமல் காப்பீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு ரூபாய்

ஒரு ரூபாய்

இதற்குக் குறைந்தபட்ச கூடுதல் கட்டணம் ஒரு ரூபாய்கள் மட்டுமே செலவாகும். நீங்கள் காப்பீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்களின் ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும்.

நாமினி

நாமினி

இந்த இணைப்பு காப்பீட்டு நிறுவனம் அனுப்புவது, இந்த இணைப்புக்குச் சென்று இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான நாமினி விவரங்களை நிரப்ப வேண்டும். நீங்கள் வாங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியில் நாமினி இருந்தால் மட்டுமே காப்பீடு க்ளெய்ம் சாத்தியமாகும்.

காப்பீட்டுத் தொகை

காப்பீட்டுத் தொகை

ரயில் விபத்து ஏற்பட்டால், பயணிகளுக்கு ஏற்படும் இழப்புக்கு ஏற்ப காப்பீட்டில் இருந்து இழப்பீடு கிடைக்கும். ரயில் விபத்தில் பயணிகள் இறந்தால் 10 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தால் நிரந்தரமாக ஊனமுற்றாலும் ரயில்வே பயணிக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.

கூடுதலாக 10000 ரூபாய்

கூடுதலாக 10000 ரூபாய்

இதேபோல் ரயில் விபத்தில் ஒரு பயணி பகுதி ஊனமுற்றால் 7.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. காயம் ஏற்பட்டால், மருத்துவமனை செலவுகள் ரூ. 2 லட்சம். இரயில் பயணியின் மரணம் அடைந்தால், இறந்தவரின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல காப்பீட்டு வழங்குநர் கூடுதலாக 10,000 ரூபாய்ச் செலுத்துகிறது.

4 மாதங்கள்

4 மாதங்கள்

ரயில் விபத்து ஏற்பட்டால், காப்பீடு செய்தவர், நாமினியாகப் பரிந்துரைக்கப்பட்டவர் அல்லது அவரது வாரிசு கோரிக்கையை இந்த இன்சூரன்ஸ்-க்குக் கிளைம் செய்யலாம். மேலும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று காப்பீட்டுக் கோரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். இதற்குச் சில ஆவணங்கள் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும். ரயில் விபத்து நடந்த 4 மாதங்களுக்குள் காப்பீடு கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Railway: Everyone can avail 10 Lakh Insurance for just 1 rupee

Indian Railway: Everyone can avail 10 Lakh Insurance for just 1 rupee
Story first published: Friday, December 30, 2022, 16:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X