நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வருமோ என்ற பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
இதற்கிடையில் ரயிலில் கொரோனா பரவல் காரணமாக நடமாடும் உணவு வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரையில் இந்த சேவை மீண்டும் இந்த சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. எனினும் தற்போது பெரும்பாலான ரயில்வே சேவைகள் வழக்கம்போல தொடங்கிவிட்டன.
ரயில்வேயில் இ-கேட்டரிங் சர்வீசஸ் சேவையை விரைவில் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் தான் ரயில்வே தனது இ கேட்டரிங் சேவையை பிப்ரவரி 1 அன்றிலிருந்து தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

IRCTC-யின் இ கேட்டரிங்
இது பயணிகளின் ரயில் பயணத்துக்கு ஏதுவாக இந்த சேவையை மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வேயில் இந்த சேவையின் மூலம் பயணிகள் வேண்டிய நேரத்தில் சூடான உணவுகளை பெற முடியும். இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் இந்த சேவையை பிப்ரவரி 1 முதல் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பயணத்தினை இனிமையாக்கும்
IRCTC-யின் இந்த சேவையானது பயணிகளின் பயணத்தினை மேலும் இனிமையாக்கும். ஏனெனில் ரயில் பயணத்தின் போது கூட, பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை பெற முடியும். இதற்காக IRCTCயின் " Food on Track " மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம். இந்த ஆப் மூலம் தங்களுக்கு விருப்பமான உணவை தரமாகவும், விரும்பிய நேரத்திலும் பெற முடியும்.

ஆப்பினை எப்படி பதிவிறக்கம் செய்யலாம்?
இந்த ஆப்பினை ஆண்ட்ராய்டு ஸ்மாட்போன் பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலும், இதே ஆப்பிள் ஸ்மார்ட்போனில் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆக இந்த ஃபுட் ஆன் ட்ராக் ஆப் மூலம் மலிவான, தரமான பலவகையான உணவுகளை ரயில்வே பயணத்தின்போது பயணிகள் பெற முடியும்.

ஆப்பில் எப்படி ஆர்டர்?
இதன் மூலம் ரயில்வே பயணிகள் விரைவில் உணவினை பெற முடியும். அதோடு இந்த சேவையை மிக எளிதாக பயன்படுத்தலாம். இந்த சேவைக்காக பயணிகள் தங்கள் பயண விவரங்களான பிஎன்ஆர் எண், ரயிலின் பெயர், இருக்கை எண், பெர்த் எண், போன்றவற்றை இந்த ஆப்பில் பதிவு செய்து ஆர்டர் செய்ய முடியும். ஆக இந்த ஆப் மூலமாக பயணிகள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே விருப்பட்ட உணவினை பெற முடியும்.

விருப்பமான உணவுகள்
அதோடு ரயில்வேயின் இந்த மெனுவில் வட இந்திய உணவுகள், தென் இந்திய உணவுகள், பீட்சாக்கள் போன்ற பல வகைகள் உள்ளன. ஆக பயணிகள் தங்கள் விருப்பமான உணவினை இதில் தேர்வு செய்து கொள்ள முடியும். அதெல்லாம் சரி எப்படி உணவினை ஆர்டர் செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

இணையத்தில் எப்படி பதிவு செய்வது?
இணையத்தின் மூலம் எப்படி உணவினை பெறுவது? வாடிக்கையாளர்கள் தங்களது டிக்கெட் மூலமாக PNR நம்பரை வைத்து பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக www.ecatering.irctc.co.in என்ற இணையத்தில் செய்து பதிவு செய்யலாம். இதற்காக மெனுவில் ஸ்டேஷன் பெயர்கள் ஸ்கீரினில் இருக்கும். அல்லது ரயில் பெயர் கொடுத்தும் தேடலாம். இதனையடுத்து உங்களது பிஎனஆர் நம்பரை கேட்கும். இதனை கொடுத்து வெரிபிகேஷன் செய்து கொண்டு, உணவு ஆர்டரை உறுதி செய்து கொள்ளலாம்.

பணம் எவ்வாறு செலுத்துவது?
நீங்கள் ரயில்வே ஸ்டேஷனை தேர்வு செய்த பின்னர், உங்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும். அங்கேயே உங்களது உணவுக்கான விலையும் இருக்கும். ஆக நீங்கள் ஆன்லைனிலேயே ஆர்டர்களை பெற முடியும். நீங்கள் இங்கும் ஆன்லைன் கேஸ் பேமெண்ட் அல்லது கேஸ் ஆன் டெலிவரியும் கொடுத்துக் கொள்ளலாம்.