ஐஆர்சிடிசி-யில் டிக்கெட் புக் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ரயில்வே ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வரம்பை அதிகரித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலி மூலம் இனி, ரயில்வே பயணிகள் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு வசதியாக, இந்தியன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு வரம்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

பென்னி பங்கினை வாங்கிபோட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள்.. என்ன பங்கு அது.. ஏன்? பென்னி பங்கினை வாங்கிபோட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள்.. என்ன பங்கு அது.. ஏன்?

ரயில்வே அமைச்சகம்

ரயில்வே அமைச்சகம்

ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆதார் அட்டை இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளுக்கான டிக்கெட் முன்பதிவு வரம்பை 12 டிக்கெட்டுகளாக உயர்த்தியுள்ளது.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

அதேபோல் ஆதாருடன் இணைக்கப்பட்ட ஒரு பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 12 டிக்கெட்டுகள் முதல் 24 டிக்கெட்டுகள் மற்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுக்களில் உள்ள ரயில் பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரிபார்க்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

இதற்கிடையில், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 9,000 ரயில் சேவைகள் இந்திய ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 1,900 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் கடந்த மூன்று மாதங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்.டி.ஐ மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பராமரிப்பு

பராமரிப்பு

அதேபோல் 6,995 ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் அல்லது கட்டுமான நோக்கங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மார்ச் முதல் மே வரை 1,934 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

மின்சார பற்றாக்குறை

மின்சார பற்றாக்குறை

இந்தியன் ரயில்வே கடுமையான மின்சாரப் பற்றாக்குறையால் பயணிகள் ரயில் சேவைகளை விட நிலக்கரி மூலம் ரயில்களை இயக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

68 புதிய திட்டங்கள்

68 புதிய திட்டங்கள்

மேலும் இந்தியன் இரயில்வே வரும் ஆண்டுகளில் ரூ.1,15,000 கோடி மதிப்பிலான 68 முக்கியமான திட்டங்களை வழங்க உள்ளது என்றும், எனவே, ரயில்வே நெட்வொர்க் முழுவதும் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு முன்னுரிமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ரயில்வே துறை மேலதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Railways increases online ticket booking limit through IRCTC website and app

Indian Railways increases online ticket booking limit through IRCTC website and app | ஐ.ஆர்.சி.டி.சியில் டிக்கெட் புக் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அறிவிப்பு!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X