என்ன காற்றிலிருந்து தண்ணீரா? அதுவும் இந்திய ரயில்வே தயாரிக்கிறதா? இது நல்லா இருக்கே. இது உண்மையாவா என்றால் உண்மைதான். இந்தியாவின் தென் மத்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு முற்றிலும் புதுமையான முறையில் குடிநீரை உற்பத்தி செய்து வருகிறது.
காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யப்படும் இயந்திரம் ஒன்று கடந்த வியாழக்கிழமை (atmospheric water generator) செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
காற்றை உள்ளே இழுத்து அடுத்தடுத்த பல்வேறு உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் இறுதியில் அதனை வடிகட்டி ஒரு தொட்டிக்கு அனுப்புகிறது. இந்தத் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது என்றும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரை அந்த இயந்திரம் உற்பத்தி செய்கிறதாம்.

இந்த புதுமையான இயந்திரம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இவ்வாறு காற்றிலிருந்து புது முறையில் தயாரிக்கப்படும் குடிநீர், ஒரு லிட்டர் பாட்டிலுடன் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே வாடிக்கையாளர்கள் பாட்டில் கொண்டு சென்றால் ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் ஒரு டம்ளர் 300 எம் எல் தண்ணீர் கண்டெய்னருடன் மூன்று ரூபாய்க்கும், இதே வாடிக்கையாளார்கள் கண்டெய்னரில் வாங்கிக் கொண்டால் 2 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே அரை லிட்டர் கண்டெய்னர் 5 ரூபாய்க்கும்., கண்டெய்னர் இல்லாமல் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து தென் மத்திய ரயில்வேயின் பசுமை, தண்ணீர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தண்ணீர் உற்பத்தி இயந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பயன்பாடு சிறப்பாக அமைந்தால் இதர ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற இயந்திரம் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்துள்ள இந்த குடிநீரை மத்திய நீர்வளத்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியோங்க மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சரிதானே. மேலும் குறைந்த விலையில் சுத்தமான தண்ணீரும் கிடைக்கும் என்றால் இது வரவேற்க தக்க விஷயம் தானே
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications