அதல பாதாளம் நோக்கிய இந்திய ரூபாய்.. எப்போது தான் மீண்டு வரும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை தொடக்கத்திலேயே 23 பைசா குறைந்து, 73.47 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியது. முந்தைய அமர்வில் ரூபாயின் முடிவு விலையானது 73.24 ரூபாயாகும்.

 

எனினும் தற்போது 73.42 ரூபாயாக வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.

இந்திய ரூபாயின் வீழ்ச்சியானது அமெரிக்கா டாலரின் மதிப்பு நன் கு வலுவடைந்த நிலையில் வந்துள்ளது. இது கொரோனாவுக்கு மத்தியிலும் 10 ஆண்டுகளாக பத்திர லாபமானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பானது நன்கு வலுவடைந்து காணப்படுகிறது.

மீண்டும் ஒரு ஊக்கத்தொகை

மீண்டும் ஒரு ஊக்கத்தொகை

கொரோனாவின் காரணமாக முடங்கி போன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க அமெரிக்கா அரசு ஊக்கத்தொகைக்கான அனுமதியினை கொடுத்துள்ளது. அதோடு மீண்டும் ஒரு ஊக்கத்தொகை அறிவிப்புகள் வரலாம் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 20ம் தேதியன்று ஜோ பிடன் பதவியேற்க உள்ள நிலையில், மீண்டும் விரைவில் இது குறித்தான அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

இதனால் அமெரிக்கா டாலரின் மதிப்பானது ஆறு நாணயங்களுக்கு எதிராக 0.37% அதிகரித்து 90.43 ஆக காணப்படுகிறது. இது பிடன் அரசு இந்த வாரத்தில் ஏதேனும் அறிவிப்புகளை கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. இது கொரோனாவுக்கு எதிராக சரிவடைந்துள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் எதிர்பார்ப்பு
 

ரூபாய் எதிர்பார்ப்பு

இதற்கிடையில் இந்த வாரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பானது 73.15 - 73.55 ரூபாயாக காணப்படுகிறது. அதோடு இந்த ஊக்கத்தொகை வெறும் அறிவிப்புகளாக மட்டும் இருக்காது என்றும், ஏனெனில் அமெரிக்காவின் இருதரப்பு கட்சியினரும் இது குறித்தான உறுதி மொழியினை கொடுத்துள்ள நிலையில், விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம். இது நலிவடைந்துள்ள பொருளாதாரத்தினை மீட்டுக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சப்போர்ட் லெவல்கள்

முக்கிய சப்போர்ட் லெவல்கள்

எனினும் இந்திய பங்கு சந்தைகள் நல்ல ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகள், கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட பலவற்றால் ஆதரிக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பானது மீண்டும் 72.90 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த முக்கிய சப்போர்ட் ஆகவும் உள்ளது. இதே வீழ்ச்சி கண்டால் 74 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Rupee falls sharply against dollar

Rupee updates.. Indian Rupee falls sharply against dollar
Story first published: Monday, January 11, 2021, 13:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X