அட இது செம நியூஸ் ஆச்சே.. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.75.14 ஆக அதிகரிப்பு.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பங்கு சந்தைகளும் சரி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தன.

இந்த நிலையில் இன்று காலையில் நான்காவது நாளாக சற்று அழுத்தத்தில் தான் இருந்தது. இதற்கிடையில் இன்று காலை 75.27 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 75.14 ரூபாயாக சற்று அதிகரித்துள்ளது.

மே 3வுடன் முடிவடையுள்ள லாக்டவுனை அடுத்து, நாட்டில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வர்த்தகத்தினை மேம்படுத்த உதவும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் எதிரொலி உள்நாட்டு பங்கு சந்தையில், சில பங்குகள் ஏற்றம் காண வழி வகுத்துள்ளது. இது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ஏற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது.

தளர்வு இருக்கலாம்

தளர்வு இருக்கலாம்

மே 3வுடன் முடிவடையுள்ள லாக்டவுனை அடுத்து, நாட்டில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வர்த்தகத்தினை மேம்படுத்த உதவும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் எதிரொலி உள்நாட்டு பங்கு சந்தையில், சில பங்குகள் ஏற்றம் காண வழி வகுத்துள்ளது. இது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ஏற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

இதற்கிடையில் இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதே பலி எண்ணிக்கையும் 1,074 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதே சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் 32 லட்சத்திற்கும் மேல் பேருக்கு மேல் அதிகரித்துள்ளது. இதே இறப்பு எண்ணிக்கையும் 2 லட்சத்தினையும் தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

வர்த்தகர்கள் உணர்வு

வர்த்தகர்கள் உணர்வு

இது ஒரு புறம் இப்படி சென்று கொண்டிருந்தாலும், வர்த்தகர்கள் மத்தியில் உற்சாகமான உணர்வுகள் அதிகரித்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் போது, இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்டால், அடிப்படை பலவீனம் தான். ஆக இன்று ரூபாயின் மதிப்பு அதிகரித்தாலும், நீண்டகால நோக்கில் குறையவே வாய்ப்புகள் அதிகம்.

ரூபாய் கணிப்பு

ரூபாய் கணிப்பு

மேலும் கோவிட்-19 வழக்குகள் இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, இந்திய ரூபாய் அதன் மதிப்பினை மேலும் இழக்க நேரிடலாம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கி குழுமத்தின் ஆய்வாளர்கள் 2020ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயாக சரியலாம் என்றும் எதிர்பார்ப்பதாக கருதுகின்றனர்.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இதற்கிடையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 810 புள்ளிகள் ஏற்றம் கண்டு 33,531 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 235 புள்ளிகள் அதிகரித்து 9788 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. ஆக இதுவும் கூட இன்று ரூபாயின் ஏற்றத்துக்கு சற்று வழிவகுத்தது எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian rupee rises to Rs.75.14 today for against dollar

Indian rupee rises to Rs.75.14 today for against dollar, due to coronavirus lock down expected easing in restrictions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X