இந்தியாவின் இழப்பு.. தமிழ்நாட்டுக்கு லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் முதல்வருக்கு 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படுவது குறித்து வெளியான அறிவிப்பு சமுக வலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

முத்து முத்தாக 5பேர்: ரகுராம் ராஜன், எஸ்தர், ஜீன், அரவிந்த், நாராயணன்.. ஸ்டாலின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

இக்குழுவில் பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள், கட்டுப்பாடுகளை விரும்பாதவர்கள் 3 பேர் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனை குழுவில் இணைந்துள்ளனர். இது சமுகவலைதளத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் விருப்பம் இல்லாமல் தங்களது பதவிகளிலிருந்து வெளியேறிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமனியன் ஆகியோரும். மோடி அரசு குறித்து அவ்வப்போது எதிர்க் கருத்து தெரிவிக்கும் அபிஜித் பானர்ஜி மனைவியும் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ ஆகியோர் தமிழ்நாட்டின் புதிய பொருளாதார ஆலோசகர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கு லாபம்

இந்தியாவின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கு லாபம்

இதற்கு ட்விட்டரில் இந்தியாவின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கு லாபமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளைக் களையும் புதிய பொருளாதார ஆலோசனை குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையேற்கிறார் என ட்வீட் செய்யப்பட்டு உள்ளது.

பொருளாதார ஆலோசனைக் குழு
 

பொருளாதார ஆலோசனைக் குழு

பல நட்சத்திரங்கள்..!! தமிழ்நாடு ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் த்ரே, இந்தியாவின் முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன் ஆகியோர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.

தமிழ்நாடு என்ன தனி நாடா..?

தமிழ்நாடு என்ன தனி நாடா..?

தமிழ்நாடு என்ன தனி நாடா..? ரகுராம் ராஜன் ஆலோசனை இருந்தால் மாநிலம் தனியாகச் சாதித்து விடுமா..? ஒன்றிய அரசின் தேவை இனி தமிழ்நாட்டில் இல்லையா...? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும், ரகுராம் ராஜன் அவர்களும் ஒன்றிணைந்துச் செயல்பட்டாலே பலன் அளிக்கும். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த முடிவை ஏற்றுக்கொள்வார் என நம்புவோம். மொத்தமாகத் தமிழ்நாடு அரசு புதிய குழுவை அமைத்தது மிகவும் சிறப்பான முடிவு

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

இதுதான் தமிழ்நாடு

இதுதான் திராவிடம்

இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

பொதுவாகத் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட, நீக்கப்பட்ட அறிஞர்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

ஏனென்றால், ஒன்றிய அரசு நாட்டின் இழப்புகளுக்குக் கடவுளையும் ஈர்ப்பு விசையையும் குறை கூறும் நபர்களை மட்டுமே பணியில் வைத்துக்கொள்ள விரும்புகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian's loss is Tamilnadu's gain: Raghuram Rajan to head a committee to advise TN on economic issues!

Indian's loss is Tamilnadu's gain: Raghuram Rajan to head a committee to advise TN on economic issues!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X