தூங்குவதற்கும் சேர்த்து சம்பளம்.. 2 - 2.30 தூக்க நேரம்.. பெங்களூர் ஸ்டார்ட் அப் சூப்பர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது ஊழியர்களை வேலை நேரத்தில் 30 நிமிடங்கள் வரையில் தூங்க அனுமதி கொடுத்துள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேக்ஃபிட் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் right to nap என அறிவித்துள்ளது.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அனைத்து ஊழியர்களும் தினமும் 2 மணி முதல் 2.30 மணி வரை தூங்குவதற்கு உரிமை உண்டு. இது அதிகாரப்பூர்வ தூக்க நேரம்.

ஹோம் லோன் வட்டி விகிதம் உயர்வு.. ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் சோகம்! ஹோம் லோன் வட்டி விகிதம் உயர்வு.. ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் சோகம்!

துங்குவதற்கு ஏற்ற சூழல்

துங்குவதற்கு ஏற்ற சூழல்

இதற்காக அலுவலகத்தில் அமைதியான அறைகளை கொண்டு வர நிறுவனம் செயல்பட்டுக் கொண்டுள்ளது. இது ஊழியர்களுக்கு தூங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வேக்ஃபிட்டின் இணை நிறுவனம் சைதன்யா ராமலிங்ககவுடா, இது குறித்த ஒரு பதிவினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதி நாசா மற்றும் ஹார்வர்ட் ஆய்வுகளை சுட்டிக் காட்டி, மதிய தூக்கம் என்பது செயல்திறனை மேம்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

திறனை மேம்படுத்தும்

திறனை மேம்படுத்தும்

மேலும் மதிய தூக்கம் என்பது நினைவாற்றல், கவனம் செலுத்துதல், கற்பனை திறன், உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது.

வேக்ஃபிட்-ன் பிராண்ட் தலைவரான பிரதீப் மல்பானி, இது உண்மையானது. என்ன நடந்ததோ அதனைத் தான் சொல்கிறேன். நாங்கள் அதிகாரப்பூர்வ உத்தியோகபூர்வ தூக்க நேரத்தினை அறிவித்துள்ளோம். வேலை நேரத்தில் தூங்குவதற்கும் எனக்கு சம்பளம் கிடைக்கும் என நான் பெருமையுடன் கூறுவேன் என கூறியுள்ளார்.

தூக்கத்திற்கு இண்டர்ன்ஷிப்

தூக்கத்திற்கு இண்டர்ன்ஷிப்

முன்னதாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் வேக்ஃபிட் மெத்தைகளின் தரத்தை பரிசோதிக்கவும், அதில் உறங்குவோர் எப்படி தூங்குகின்றனர், அவர்களின் அனுபவம் என்னவென்பதை ஆராய்வதற்காக கடந்த ஆண்டு இண்டர்ன்ஷிப்களை அறிமுகப்படுத்தியது. அதில் பங்கேற்பவர்கள் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என அறிவித்திருந்தது.

பாராட்டு

பாராட்டு

வேக்ஃபிட்டின் இந்த அறிவிப்பு நிச்சயம் ஊழியர்களுக்கு ஒரு உத்வேகத்தினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஊழியர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indian start up plans to allow employees to take 30 minute naps at work

indian start up plans to allow employees to take 30 minute naps at work/பணி நேரத்தில் 30 நிமிட தூங்கிக் கொள்ளலாம்.. பெங்களூர் ஸ்டார்ட் அப் சூப்பர் அறிவிப்பு!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X