மாஸ் காட்டும் டிசிஎஸ்.. புதிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளம் அறிமுகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் கன்சல்டன்சி நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் புதிதாக ஒரு கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் டிசிஎஸ் இப்புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

 

Quartz Smart Solution என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளம், வங்கி மற்றும் முதலீடுகளுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தளத்தில் பல வகையிலான கிரிப்டோகரன்சி, டிஜிட்டல் சொத்துக்கள், டிஜிட்டல் காயின்களை வாங்க முடியும்.

இதுமட்டும் அல்லாமல் பியாட் கரன்சி, வர்த்தகச் சேனல்கள், பொதுப் பிளாக்செயின் நெர்வொர்க் எனப் பல்வேறு முதலீட்டு வழிகள் மூலம் வர்த்தகம் செய்யும் வகையில் இந்தக் கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..!பில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..!

கூட்டணி

கூட்டணி

டிசிஎஸ் இந்த Quartz கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தை, பிளாக்செயின் ஸ்டார்ட்அப் நிறுவனமான Quartz உடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தத் தளத்தை உருவாக்குவதற்காகவே பிரத்தியேகமாக இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

Quartz நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகத் துறையில் பயன்படுத்தும் distributed ledger டெக்னாலஜி-யான 'Smart Ledgers', ஸ்மார்ட் கான்டிராக்ட்-ஐ உருவாக்கும் ‘Quartz DevKit', பல்வேறு தளத்துடன் இணைக்கும் ‘Quartz Gateway', நிர்வாகம் மற்றும் கண்காணிப்புக்காகப் பயன்படுத்தும் ‘Quartz Command Center' ஆகிய அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து இந்த Quartz கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தை டிசிஎஸ் உருவாக்கியுள்ளது.

 

கிரிப்டோகரன்சி மதிப்பு

கிரிப்டோகரன்சி மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 1.54 சதவீதம் குறைந்து 681,646 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் எத்திரியம் 3 சதவீதம் சரிந்து 17,398.45 ரூபாய்க்குக் குறைந்துள்ளது, பிட்காயின் கேஷ் 3.11 சதவீதம் வரையில் சரிந்து 16,560 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதேபோல் லைட்காயின் 4.16 சதவீதம் வரையில் சரிந்து 3,122 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

 

கிரிப்டோகரன்சி வர்த்தகம்
 

கிரிப்டோகரன்சி வர்த்தகம்

பங்குச்சந்தை, நாணய சந்தை, கச்சா எண்ணெய், உலோகம் வர்த்தகம் என அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்த வர்த்தகம் தான் கிரிப்டோகரன்சி வர்த்தகம்.

ஆனால் பாதுகாப்பற்ற தன்மை, நடைமுறையில் ஒவ்வாத வர்த்தகம் எனப் பல்வேறு காரணங்களாக உலக நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்தது.

சமீபத்தில் கூட Cashaa எனக் கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தில் இருந்து சுமார் 3 மில்லியன் டாலர் அளவிலான பிட்காயின் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

டிசிஎஸ்

டிசிஎஸ்

Quartz கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தின் மூலம் டிசிஎஸ் ஒருபக்கம் கிரிப்டோகரன்சி வர்த்தகச் சந்தையின் டெக்னாலஜி பிரிவில் இறங்கியுள்ளது. மேலும் இக்கூட்டணியின் மூலம் இனி பிளாக்செயின் துறை சார்ந்த பல வர்த்தகத்தைப் பெற டிசிஎஸ்-ல் முடியும்.

இதோடு டிசிஎஸ் சில வருடங்களுக்கு முன்பு திட்டமிட்டபடி அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Tech Gaint TCS launched Crypto Trading platform: Quartz Smart Solution

Indian Tech Gaint TCS launched Crypto Trading platform: Quartz Smart Solution
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X