இதுவரை ரூ.256 கோடி அவுட்.. இந்தியாவின் வாரன் பஃபெட்டுக்கே இந்த நிலையா.. அப்ப இனி என்னவாகும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருந்தால் இவரை பற்றி அறியாமல் இருந்திருக்க முடியாது. இந்தியாவின் வாரன் பஃபெட் என முதலீட்டாளர்களால் அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதில் மிக கைதேர்ந்தவர்.

 

ஆப்டெல் கணினி மையத்தின் நிறுவனரான இவர், சில பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்து வருகிறார்.

இந்திய பில்லியனர்களில் ஒருவரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஆகியோர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 256 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனராம். சரி அப்படி எதில் தான் முதலீடு செய்திருந்தனர். எப்படி இவ்வளவு நஷ்டம் வாருங்கள் பார்க்கலாம்.

டெல்டா கார்ப்பில் முதலீடு

டெல்டா கார்ப்பில் முதலீடு

கோவாவை தளமாகக் கொண்ட கேசினோ மற்றும் கேமிங் பிளேயரின் டிசம்பர் 31, 2019 வரையிலான காலத்தில் அதன் பங்கு விலையானது 64.78% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது டெல்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த டிசம்பர் 31, 2019 ல் 197.95 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 69.70 ரூபாயாக உள்ளது.

64% பங்கு வீழ்ச்சி

64% பங்கு வீழ்ச்சி

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகாவும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டின் இறுதியில், டெல்டா கார்ப் நிறுவனத்தில் முறையே 1.15 கோடி பங்குகள் மற்றும் 85 லட்சம் பங்குகளையும் வைத்திருந்தனர். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அப்போது 395.9 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. ஆனால் இன்று அதன் மதிப்பு 64%க்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது.

பங்கு மதிப்பு இம்புட்டு தான்
 

பங்கு மதிப்பு இம்புட்டு தான்

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அதன் மதிப்பு சுமார் 139.4 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 256.5 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று சந்தை தினங்களில் மட்டும் இந்த ஸ்மால் கேப் பங்கானது 7.27% வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 73% வீழ்ச்சியுடனும், இதே கடந்த ஒரு மாதத்தில் 24% வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது.

52 வார குறைந்த விலை

52 வார குறைந்த விலை

இதே சென்செக்ஸ் கடந்த ஒரு வருடத்தில் 20.83% வீழ்ச்சியுடனும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10% வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது. இந்த நிலையில் ராகேஷ் வைத்திருக்கும் இந்த பங்கானது 52 வார குறைவினை எட்டியுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் மாதத்தில் டெல்டா கார்ப் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ராதகிஷன் தமனி 15,50,000 பங்குகளை, 65.25 ரூபாய் என்ற விலைக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரிய முதலீட்டு ஜாம்பவான்களுக்கே இந்த நிலை எனில், சிறு குறு முதலீட்டாளர்களின் கதி என்ன..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indian warren buffett Rakesh jhunjhuwala, and his wife rekha lost Rs.256 cr in this year

Rakesh jhunjhuwala, and his wife rekha lost over Rs.256 cr in Delta corp share since beginning of this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X