அடிசக்க.. பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதும் இல்லாத வகையில் 2020ஆம் ஆண்டு மக்களுக்கும் சரி, வர்த்தகச் சந்தைக்கும் சரி மிகவும் மோசமான காலமாகவே அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கொரோனா மக்களை அனைத்து வகையிலும் பாதித்துள்ளது, சிலருக்கு உயர் இழப்பு, சிலருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, சிலருக்கு வர்த்தக இழப்பு, சிலருக்கு எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மருத்துச் செலவு அதன் மூலம் ஏற்பட்ட நிதி நெருக்கடி.. இப்படிச் சொலிக்கிட்டே போகலாம்.

 

33 வருட வரலாற்றை உடைத்த பிரிட்டன்.. ஓரே வருடத்தில் புதிதாக 24 பில்லியனர்கள்..!

ஆனால் இந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா வாயிலாகச் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது மட்டும் அல்லாமல் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கை என்பது பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது பிரிட்டன் நாட்டிலும் நடந்துள்ளது.

33 வருட வரலாறு

33 வருட வரலாறு

பிரிட்டன் நாட்டில் 2020ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 24 பில்லியனர்களை உருவாகி மொத்த பில்லியனர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 33 வருடத்தில் அதிகப்படியான பணக்காரர்களை உருவாக்கி சாதனை படைத்ததுள்ளது பிரிட்டன்.

சொத்து மதிப்பில் 22% உயர்வு

சொத்து மதிப்பில் 22% உயர்வு

மேலும் 2020ல் பிரிட்டன் நாட்டின் 171 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 22 சதவீதம் அதிகரித்து 597.2 பில்லியன் டாலர் அளவீட்டை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் நாட்டின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் 3 பேர் இந்தியர்கள் என்பது தான் வியக்க வைக்கும் விஷயமாக உள்ளது.

உக்ரைன் லியோனார்ட் பிளேவட்னிக்
 

உக்ரைன் லியோனார்ட் பிளேவட்னிக்

பிரிட்டன் நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை உக்ரைன் நாட்டில் பிறந்த லியோனார்ட் பிளேவட்னிக் பிடித்துள்ளார். எண்ணெய் மற்றும் மீடியா துறையில் வர்த்தகம் செய்யும் இவர் 23 பில்லியன் பவுண்ட் சொத்து மதிப்புடன் அசத்துகிறார்.

டேவின் ரூபன், சைமன் ரூபன்

டேவின் ரூபன், சைமன் ரூபன்

இவரைத் தொடர்ந்து மும்பையில் பிறந்து பிரிட்டன் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள டேவின் ரூபன், சைமன் ரூபன் ஆகியோர் 21.465 பில்லியன் பவுண்டு சொத்து மதிப்புடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஹிந்துஜா குடும்பம்

ஹிந்துஜா குடும்பம்

மேலும் 3வது இடத்தில் 17 பில்லியன் பவுண்டு உடன் ஹிந்துஜா குழுமத்தின் ஸ்ரீ மற்றும் கோபி ஹிந்துஜா இடம்பிடித்துள்ளது. 4வது இடத்தை 16.3 பில்லியன் பவுண்டு உடன் ஜேம்ஸ் டைசன் குடும்பம் பிடித்துள்ளது. 5வது இடத்தை மீண்டும் ஒரு இந்தியக் குடும்பம் பிடித்துள்ளது.

லட்சுமி மிட்டல் குடும்பம்

லட்சுமி மிட்டல் குடும்பம்

பிரிட்டன் நாட்டின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்சலர் மிட்டல்-ன் தலைவரான லட்சுமி மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 14.68 பில்லியன் பவுண்ட் உடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் டாப் 5 இடத்தில் 3 இடத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: uk lakshmi mittal
English summary

Indians dominating in Britain top 5 rich list

Indians dominating in Britain top 5 rich list
Story first published: Saturday, May 22, 2021, 19:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X